கேழ்வரகு லட்டு

கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் (சுண்ணாம்பு) சத்துக்கள் உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.

சாதாரணமாக கேழ்வரகில் களி, கூழ், அடை செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பி உட்கொள்ள மாட்டார்கள். இப்படி எளிமையாக பத்தே நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய கேழ்வரகு லட்டினை செய்து தர விரும்பி உண்பார்கள். Click to English Ragi Laddo Recipe.

இதற்கு நாம் முளைகட்டிய கேழ்வரகை எடுத்துக்கொள்ள கூடுதல் சத்துக்கள் கிடைக்கும். மேலும் கேழ்வரகின் பயன்கள் நன்மைகளை தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு பயன்களும் நன்மைகளும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • ½ கப் நாட்டு சர்க்கரை (3 ஏலக்காயுடன் பொடித்தது)
  • ½ கப் பசு நெய்
  • 10 – 15 முந்திரி

செய்முறை

கேழ்வரகு மாவை வாசம் வரும் வரை வறுக்கவும்.

சூடாக இருக்கும் வறுத்த மாவுடன் பொடித்த நாட்டு சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, மீதம் இருக்கும் நெய் சேர்த்து உருண்டையாக பிடித்து வைக்கவும்.

கேழ்வரகு லட்டு

சாதாரணமாக கேழ்வரகில் களி, கூழ், அடை செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பி உட்கொள்ள மாட்டார்கள். இப்படி எளிமையாக பத்தே நிமிடத்தில் தயாரிக்கக்கூடிய கேழ்வரகு லட்டினை செய்து தர விரும்பி உண்பார்கள்.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 10 minutes
மொத்த நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் கேழ்வரகு மாவு
  • ½ கப் நாட்டு சர்க்கரை (3 ஏலக்காயுடன் பொடித்தது)
  • ½ கப் பசு நெய்
  • 10 – 15 முந்திரி

செய்முறை

  • கேழ்வரகு மாவை வாசம் வரும் வரை வறுக்கவும்.
  • வறுத்த மாவுடன் பொடித்த நாட்டு சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, மீதம் இருக்கும் நெய் சேர்த்து உருண்டையாக பிடித்து வைக்கவும்.