எனர்ஜி கூழ்
கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் (சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.
இந்த கேழ்வரகைக் கொண்டு எளிமையாக கேழ்வரகு கூழ் செய்ய – கேழ்வரகு கூழ்.
கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், இரும்புச் சத்து, ரைபோபுளோவின், நயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள் , மாவுச்சத்து, பி 11 வைட்டமின், கரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பல உயிர்ச்சத்துகள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும் .வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
எளிமையாக கம்பங்கூழ் தயாரிக்க – கம்பங்கூழ்.
உடல் உஷ்ணத்தை சமமாக்கும் சிறந்த எனர்ஜி கூழ். உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி உட்பட பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு.
இந்த கேழ்வரகு கம்பு கூழ் உடல் ஆரோக்கியத்தை மீட்டு கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனுடன் உடலை குளிர்வித்து உடலுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்களையும், பல அத்தியாவசிய சத்துக்களையும் அளிக்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு மாவு
- 1/2 கப் நாட்டு கம்பு குருணை
- பசு மோர்
- சின்ன வெங்காயம்
- உப்பு
செய்முறை
முதலில் 1 கப் கேழ்வரகு மாவை தோசை பதத்திற்கு கட்டியில்லாமல் சிறிது உப்பு சேர்த்து கரைத்துக்கொண்டு 8 மணி நேரம் ஊற்ற வைக்கவும்.
காலையில் ஊற வைக்க மதியம் அடி கனமான பாத்திரத்தில், 4 கப் தண்ணீர் சேர்த்து உடைத்து வைத்திருக்கும் 1/2 கப் நாட்டுக் கம்பை கொதிக்கவைக்கவும். (நாட்டுக் கம்பை கழுவி ஊறவைத்தும் குருணையாக்கிக் கொள்ளலாம்.)
கொதிவந்ததும், மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவினை அதனுடன் சேர்க்கவேண்டும்.
கேழ்வரகு மாவை சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
பிறகு கூழ் நல்ல வாசனையுடன் நன்கு பளபளப்பாக, கெட்டியாகி வர சுமார் 20 நிமிடங்கள் ஆகும்.
நன்கு வெந்த கேழ்வரகு நாட்டு கம்பினை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
ஆறியவுடன் அப்படியே 8 மணி நேரம் வைத்து, பிறகு கரைத்தும் பரிமாறவும்.
இதில் வெங்காயம், துருவிய மாங்காய், மோர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.
இப்போது சுவையான ஆரோக்கிய கூழ் தயார்.
நல்ல ஒரு சத்தான எனர்ஜி கூழ் தயார். உடலுக்கு ஊட்டமும் தெம்பும் அளிக்கும் கூழ்.
கேழ்வரகு கூழ் / ராகி கூழ்
தேவையான பொருட்கள்
- 1 கப் கேழ்வரகு மாவு
- 1/2 கப் நாட்டு கம்பு குருணை
- பசு மோர்
- சின்ன வெங்காயம்
- உப்பு
செய்முறை
- முதலில் 1 கப் கேழ்வரகு மாவை தோசை பதத்திற்கு கட்டியில்லாமல் சிறிது உப்பு சேர்த்து கரைத்துக்கொண்டு 8 மணி நேரம் ஊற்ற வைக்கவும்.
- காலையில் ஊற வைக்க மதியம் அடி கனமான பாத்திரத்தில், 4 கப் தண்ணீர் சேர்த்து உடைத்து வைத்திருக்கும் 1/2 கப் நாட்டுக் கம்பை கொதிக்கவைக்கவும். (நாட்டுக் கம்பை கழுவி ஊறவைத்தும் குருணையாக்கிக் கொள்ளலாம்.)
- கொதிவந்ததும், மேலும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கரைத்து வைத்திருக்கும் கேழ்வரகு மாவினை அதனுடன் சேர்க்கவேண்டும்.
- கேழ்வரகு மாவை சேர்த்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும்.
- பிறகு கூழ் நல்ல வாசனையுடன் நன்கு பளபளப்பாக, கெட்டியாகி வர சுமார் 20 நிமிடங்கள் ஆகும்.
- நன்கு வெந்த கேழ்வரகு நாட்டு கம்பினை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.
- ஆறியவுடன் அப்படியே 8 மணி நேரம் வைத்து, பிறகு கரைத்தும் பரிமாறவும்.
- இதில் வெங்காயம், துருவிய மாங்காய், மோர், தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து கரைத்து பரிமாறவும்.
- இப்போது சுவையான ஆரோக்கிய கூழ் தயார்.
- நல்ல ஒரு சத்தான எனர்ஜி கூழ் தயார். உடலுக்கு ஊட்டமும் தெம்பும் அளிக்கும் கூழ்.