எளிமையாக ஜீரணிக்கக் கூடிய உணவு. சிறுதானியங்களில் இன்று மிகவும் பிரபலமாக கிடைக்ககூடியது அவல் வகைகள், உடனடி உணவிற்கு மிகவும் ஏற்றதாகவும் உள்ளது. கேழ்வரகு சிறுசோளம் அவல் இட்லியை எளிமையாக தயரிக்க நமக்கு கேழ்வரகு அவல் மற்றும் சிறு சோளம் அவல் தேவை.
சிறுசோளத்தில் சிகப்பு, வெள்ளை என இரண்டு வகை உள்ளது, அவற்றில் எதைவேண்டுமானாலும் இந்த இட்லி செய்ய பயன்படுத்திகொள்ளலாம்.
கேழ்வரகு அவல் மற்றும் சிறுசோளம் அவல் வாங்குவதற்கு
கீழிருக்கும் இணைப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கேழ்வரகு அவல்
சிறு சோளம் அவல்
தேவையான பொருட்கள்
½ கப் சிறு சோள அவல்
½ கப் கேழ்வரகு அவல்
4 தே கரண்டி உளுந்து மாவு
2 கப் புளித்த பசுந் தயிர்
1 ப.மிளகாய்
சிறிது வெங்காயம்
சிறிது உப்பு
சிறிது சீரகம்
சிறிது செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
சிறு சோளம், கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சிரகம், ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
பின் உளுத்த மாவை சிறிது சூட்டில் வறுத்து பொடித்த கேழ்வரகு, சோள அவலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
1/2 மணி நேரத்திற்குப் பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு, சோள அவல் கலவையை ஊற்றி பின் 10 நிமிடம் வேக வைக்கவும்.
சூடான சத்தான சோள கேழ்வரகு அவல் இட்லி தயார்.
சோள கேழ்வரகு அவல் இட்லி
தேவையான பொருட்கள்
- ½ கப் சிறு சோள அவல்
- ½ கப் கேழ்வரகு அவல்
- 4 தே கரண்டி உளுந்து மாவு
- 2 கப் புளித்த பசுந் தயிர்
- 1 ப.மிளகாய்
- சிறிது வெங்காயம்
- சிறிது உப்பு
- சிறிது சீரகம்
- சிறிது செக்கு நல்லெண்ணெய்
செய்முறை
- சிறு சோளம், கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- சிறிது நல்லெண்ணெய் காயவைத்து சிரகம், ப.மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
- பின் உளுத்த மாவை சிறிது சூட்டில் வறுத்து பொடித்த கேழ்வரகு, சோள அவலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காய கலவையை சேர்த்து 1/2 மணி நேரம் ஊறவைக்கவும்.
- 1/2 மணி நேரத்திற்குப் பின் இட்லித்தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு, சோள அவல் கலவையை ஊற்றி பின் 10 நிமிடம் வேக வைக்கவும்.
- சூடான சத்தான சோள கேழ்வரகு அவல் இட்லி தயார்.