கேழ்வரகில் தான் அதிகபடியான கால்சியம் (சுண்ணாம்பு) உள்ளது. கால்சியம் நமது பல் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அவசியமான தாது. இதனால் எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை விரைவில் குணமாக்க வல்லது.
மேலும் கேழ்வரகைப் பற்றி தெரிந்துக்கொள்ள இங்கு இணையவும் – கேழ்வரகு சத்துக்களும் பயன்களும்.
உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி உட்பட பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு.
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- 4 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 2 கப் மோர்
செய்முறை
கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும்.
நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து சற்று சூடு ஆறிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும்.
ஏழு எட்டு மணி நேரத்திற்குப் பின் அதாவது இரவு கேவரகு மாவினை வேகவைத்து தண்ணீர் சேர்த்து மூடிவைத்து மறுநாள் காலையில் தேவையான அளவு எடுத்து அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
சிறந்த காலை உணவு.
ஈஸி கேழ்வரகு கூழ்
உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. உடல் பருமன், நீரிழிவு உட்பட பல தொந்தரவுகளுக்கு சிறந்த காலை உணவு.
தேவையான பொருட்கள்
- ½ கப் கேழ்வரகு மாவு
- 4 கப் தண்ணீர்
- தேவையான அளவு உப்பு
- 2 கப் மோர்
செய்முறை
- கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து உப்பு சேர்த்து வேக விடவும்.
- நன்கு வெந்த பின் அடுப்பை அணைத்து சற்று சூடு ஆறிய பின் சிறிது தண்ணீர் சேர்த்து மூடிவைக்கவும்.
- ஏழு எட்டு மணி நேரத்திற்குப் பின் அதாவது இரவு கேவரகு மாவினை வேகவைத்து தண்ணீர் சேர்த்து மூடிவைத்து மறுநாள் காலையில் தேவையான அளவு எடுத்து அதனுடன் மோர் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
- சிறந்த காலை உணவு.