முள்ளங்கிக் கீரை

சுண்ணாம்பு சத்து நிறைந்த கீரை

பலரால் பயன்படுத்தக்கூடிய கீரை வகைகளில் ஒன்று இந்த முள்ளங்கிக் கீரை. நாம் சமையலில் பயன்படுத்தும் காய்களில் ஒன்றாக முள்ளங்கியின் அடிப்பகுதியில் அதாவது வேர் கிழங்காக முழுவதும் மண்ணிற்கு அடியில் இல்லாமல் பாதியளவு நிலத்திற்கு கீழும் மீதம் மேல் எழும்பியும் இருக்கும் காய்.

முள்ளங்கி காயை நாம் சாதாரணமாக சந்தைகளிலும் பார்க்க முடியும். இந்த முள்ளங்கியின் மேல் விளைந்திருக்கும் இலைகளே முள்ளங்கி கீரைகளாகும். இதன் இலைகள் அகன்றும் நுனி குறுகியும் இருக்கும். முள்ளங்கியில் இரு வகை உண்டு. ஒன்று வெள்ளை முள்ளங்கி மற்றொன்று சிவப்பு முள்ளங்கி. இவை இரண்டிலுமே இலைகளை கீரைகளாகப் பயன்படுத்தலாம். இந்த இரண்டு வகை கீரைகளிலும் சிறப்பான குணங்கள் உள்ளது.

முள்ளங்கிக்கீரையில் நாம் உணவு தயாரித்து உண்ணலாம். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முக்கியமான உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளது. முள்ளங்கி கீரையில் பச்சடி, சட்னி, பொரியல் என பலவகை உணவுகளை தயாரிக்கலாம்.

முள்ளங்கி கீரையின் சத்துக்கள்

சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிகம் உள்ளது. மேலும் இரும்புச்சத்து மற்றும் ஆக்கார்பீக் அமிலம் நிறைந்துள்ளது. உயிர் சத்தான வைட்டமின் ஏ சத்துக்கள் இந்த கீரையில் அதிகமாகவே உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் கீரை.

அன்றாடம் சத்தற்ற வெள்ளை அரிசியை பயன்படுத்துபவர்களுக்கு பல சத்துக்கள் நிறைந்த இந்த கீரை சிறந்த ஒரு உணவாக இருக்கும். இந்த கீரையை அரிசி சாதத்துடன் சேர்த்து உண்ணும் பொழுது அதிகமான சத்துக்களை நாம் பெற முடியும். குறிப்பாக அதிகமாக சுண்ணாம்பு சத்துக்களைப் பெறமுடியும்.

சருமம், இருதயம், கண்களை பாதுகாக்கும் கீரை இந்த முள்ளங்கி கீரை. மூலம், நீரிழிவு, காமாலை, வாதம் ஆகியவற்றிற்கும் நல்லது.

உடல் எடையை குறைக்க சிறந்த ஒரு கீரை இந்த முள்ளங்கி கீரை. உடல் தேங்கியிருக்கும் கழிவுகளையும், கெட்ட கொழுப்பையும் நீக்கவல்லது.

முள்ளங்கிக் கீரையில் இருக்கும் புரத சத்துக்களை பிரித்து வியாபாரரீதியாக மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. புரதச்சத்து குறைவை போகக் கூடிய சிறந்த கீரை இது.

(1 vote)