முள்ளங்கி – இனப்பெருக்க உறுப்பை பலப்படுத்தும் நம் காய்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க மண்டலத்தில் வரக்கூடிய பல பிரச்சனைகளுக்கு சிறந்த ஒரு மருந்தாக இருக்க கூடிய காய் இந்த முள்ளங்கிக் காய். முள்ளங்கியில் வெள்ளை முள்ளங்கி சிவப்பு முள்ளங்கி என வகையுமுண்டு. மூலபம் எனற பெயரும் முள்ளங்கிக்கு உண்டு. இது ஒரு செடி வகைத் தாவரம்.

ஏற்கனவே முள்ளங்கிக் கீரையில் இருக்கக்கூடிய சத்துக்களையும் அதன் பயன்களையும் பற்றி தெரிந்துக் கொண்டிருக்கிறோம். இந்த பதிவில் முள்ளங்கியின் மருத்துவ குணங்களையும் நோய் தீர்க்கும் தன்மையையும் பற்றி பார்க்கலாம். முள்ளங்கி மண்ணின் அடியிலும் மண்ணை விட்டு வெளி வந்தவாறும் விளையக்கூடியது.

பொதுவாக வெளிவரும் பொழுது பூமியை விட்டு சற்று வெளிப்புறம் தள்ளப்பட்டு வளர்ந்திருக்கும். இதனுடைய இலைகள் பல பிளவுகளுடன் இருக்கக் கூடியதாக இருக்கும். இதன் இலைகளை கீரையாகவும் பயன்படுத்துவதுண்டு. இந்த செடியின் ஆணிவேர் கிடங்கு தான் முள்ளங்கி. இந்த செடியின் இலை, கிழங்கு, விதை என அனைத்து பாகங்களுமே பயன்படக் கூடியதாக உள்ளது.

கார்ப்புச் சுவையைக் கொண்டிருக்கக்கூடிய இந்த முள்ளங்கி பல விதங்களில் பயன்படும் கூடியதாகவும் உள்ளது. வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான காய் இது. புற்று நோயிலிருந்து நம்மை பாதுகாக்க கூடிய தன்மை கொண்டது. புற்று நோய் எதிர்ப்பு சக்தியை இந்த முள்ளங்கி நமக்கு அளிக்கும்.

தீர்க்கும் நோய்கள்

அஜீரணம், வாத நோய், வயிற்று வலி, பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை நோய்கள், சினைப்பை கட்டி, சளி தொந்தரவுகள், ஆண்மை குறைவு, சருமத்தில் வரக்கூடிய சில பிரச்சனைகள், பல் நோய், தலைவலி, இருமல், சுவையின்மை, இரைப்பு, மூலக்கடுப்பு, கப நோய்களுக்கும் ஒரு அற்புதமான மருந்து இந்த முள்ளங்கி.

சிறுநீர் தொந்தரவுகள்

முள்ளங்கி செடி விதையிலிருந்து முளைத்து இரண்டு மூன்று இலைகள் துளிர்த்தவுடன் அந்த முள்ளங்கி துளிர் இலைகளை எடுத்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அன்றாடம் இரண்டு வேளை எடுத்துவர வெள்ளையினால் வரக்கூடிய சிறுநீர் அடைப்பு தொந்தரவுகள் நீங்கும்.

இனப்பெருக்க குறைபாடுகள்

இயற்கையின் கொடையான முள்ளங்கி சாறு பருகுவதால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் பெண்களுக்கு வரக்கூடிய சினைப்பை தொந்தரவுகள், சினைமுட்டை பிரச்சனைகள், கருப்பை சார்ந்த பிரச்சனைகள், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு ஆண்மையைப் பெருக்கக் கூடிய ஆற்றல் நிறைந்தது.

முள்ளங்கி உண்பதால்

அவ்வப்பொழுது முள்ளங்கியை சமைத்து உணவுடன் உண்பதால் ஆஸ்துமா, இருமல், கபநோய்கள், சிறுநீர் தொந்தரவுகள், உடல் பருமன், சிறுநீர் கடுப்பு, வீக்கம், வயிற்று எரிச்சல், வாதம் போன்ற தொந்தரவுகள் நீங்கும்.

சுவையின்மை, அஜீரணம் நீங்க

பச்சையாக முள்ளங்கி இலையை தின்று வர சுவையின்மை, அஜீரணம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.

முள்ளங்கி இலை சாறு

அன்றாடம் முள்ளங்கி இலை சாறினை சிறிதளவு இரண்டு, மூன்று வேளை பருகி வர வாத நோய், மலச்சிக்கல், சூதகக்கட்டு, சிறுநீர் அடைப்பு போன்றவை நீங்கும்.

முள்ளங்கி விதை குடிநீர்

சிறிது முள்ளங்கி விதையை எடுத்து நீரிலிட்டு நன்கு காய்ச்சி ஒரு கஷாயமாக தயாரித்து கொடுக்க மேல் குறிபிட்டுள்ள பலவிதமான நோய்கள் நீங்கும்.

முள்ளங்கி சாறு

அன்றாடம் முள்ளங்கி சாறை குடித்து வர சிறுநீர் கோளாறுகள், சிறுநீர் தாரை, கருப்பை கோளாறுகள், மாதவிடாய் தொந்தரவுகள், கல்லீரல் நோய்கள் போன்ற நோய்கள் விலகும்.

(14 votes)