புங்க மரம் – நம் மூலிகை அறிவோம்

Pongamia Pinnata; Millettia pinnata; Pongame oil tree; புங்க மரம்

தமிழகத்தில் பரவலாக பார்க்கப்படும் ஒரு மரம் புங்க மரம். சாலை ஓரங்கள், தோட்டங்கள் என அனைத்து இடங்களிலும் பார்க்கப்படும் மரம். சாதாரணமாக மூன்று மீட்டர் உயரம் வளர்ந்து அதே அளவும் பல கிளைகளுடன் அடர்த்தியாக படர்ந்திருக்கும். புங்கு, கரஞ்சகம் மற்றும் பூந்தி எனப்படும் மர வகையை சேர்ந்த மரம் புங்க மரம்.

சிற்றகத்திப் பூவைப் போலவே புங்கை மரத்தின் பூக்களும் பூத்து கொத்துக் கொத்தாகக் காய்க்கும். உயிர் சத்துக்களை அதிகளவு வெளியேற்றும் மரங்களில் ஒன்று இந்த புங்கை மரம். அதனால் சுற்றுசூழல் பாதுகாக்கப் படுவதுடன் வெப்ப காற்றையும் குறைக்கும் தன்மை கொண்டது.

புங்கை மரங்கள் இருக்கும் இடங்கள் பொதுவாக குளிர்ந்த காற்றை வெளிப்படுத்தி மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் புத்துணர்வை அளிக்கும்.

புங்கை இலைகள் வயிற்றுப் புண்ணை போக்கும் தன்மைக் கொண்டது. புங்கை வேர் பித்த மயக்கத்தை தெளியவும் உதவுகிறது.

பித்தத்தால் சிலருக்கும் மயக்கம், கிறுகிறுப்பு வரும். அதற்கு புங்கை வேர் கசாயம் சிறந்த பலனளிக்கும். புங்கை வேர் கசாயத்தை தயாரித்து அதனை காலை, மாலை பருகிவர பித்தம் முற்றிலும் நீங்கும்.

(1 vote)