புளிச்சக்கீரை – நம் கீரை அறிவோம்

நம்ம கடை

Shop Here for Green Gifts

புளிச்ச கீரை உடல் வலிமையைப் பெருக்கும் முதன்மையான கீரை. உடல் நலமில்லாத பெரியவர்கள், உடல்நலக் குறைவிலிருந்து தேறியவர்கள், பலவீனமாக இருப்பவர்கள் அடிக்கடி இந்த புளிச்ச கீரையை சாப்பிட்டால் உடல் நலமாகும். இந்த கீரையில் உயிர் சத்துக்கள் குறைவாக இருந்தாலும் தாது சத்துக்கள் மிகவும் அதிகமாக உள்ளது. தவிர இரும்பு சத்து அதிகமாக உள்ளது.

காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்தமாக்கும். புளி, காரம் சேர்க்காமல் வதக்கி சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி செய்யும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும். இந்த கீரை புளிச்சக் கீரையை பித்தம் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் பித்தத்தை உண்டு பண்ணும் ஆற்றல் இதற்கு அதிகமாக உள்ளது.

இந்தக் கீரையை சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் விரைவில் குணமாகும். இதனை ஆந்திர மக்கள் விரும்பி சாப்பிடுவதனால் கோங்குரா சட்னி என சிறப்பு பெயருடன் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

(2 votes)