இயற்கை உரங்கள் தயாரிக்கும் முறை
இரசாயன உரங்களால் உடல் ஆரோக்கியமும், மண்வளமும் பெரியளவில் பாதிப்படைவதுடன் சுற்றுசூழலும் மாசடைகிறது. இதற்கு சிறந்த மாற்றாக இயற்கை உரங்களும் இயற்கை பூச்சி விரட்டிகளும் உள்ளது.
இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது புகையிலைக் கரைசல். இதனை குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் பூச்சி, நோய் தாக்கத்திலிருந்து பயிரை பாதுகாக்கலாம்.
இயற்கை விவசாயம் செய்பவர்கள் மற்றும் மாடித் தோட்டம், வீட்டு தோட்டம் செய்பவர்கள் பயன்படுத்த சிறந்த பலனளிக்கும்.
புகையிலைக் கரைசல் தயாரிக்க தேவையான பொருட்கள்
புகையிலை – 150 கிராம்
தண்ணிர் – 1 லிட்டர்
புகையிலைக் கரைசல் தயாரிக்கும் முறை
முதலில் 150 கிராம் புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் 1 லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது புகையிலையை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து பிறகு பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஓர் இரவு அல்லது 10 மணிநேரம் மூடி வைத்து விட வேண்டும்.
(கொதிக்கும்போது தேவைப்பட்டால் வேப்ப இலையையும், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்).
பத்து மணி நேரத்திற்கு பின் அவற்றை நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.
கிடைக்கக் கூடிய கரைசலுடன் 10 மடங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்க வேண்டும்.
புகையிலைக் கரைசலின் பயன்கள்
சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
சாறு உறுஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் வைரஸ் நோய் கட்டுப்படும்.
புழுக்களுக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தி உண்ண விடாமல் தடுக்கும்.
மலர்களை பயிரிட்டிருந்தால் அவர்களுக்கு நல்ல தொடர் மகசூழலை அளிக்கும்.
பயன்படுத்தும் பயிர்கள்
அனைத்துவகை பயிகளுக்கும் தெளிக்க தெளிக்கலாம்.
கட்டுப்படுத்தும் பூச்சிகள்
அசுவுணி, பச்சைதத்துப்பூச்சி, இலைப்பேன், மாவுப்பூச்சி
பயன்படுத்தும் முறை
பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்கலாம்.
பயிர் நடவு செய்த 15 நாட்களில் ஒரு முறையும் மாதம் ஒரு முறையும் தெளிக்கலாம்.
புகையிலை ஒரு மிகச்சிறந்த பூச்சிக்கொல்லி. இது ஒரு இயற்கை முறையாக இருந்தாலும், இயற்கை விவசாய சான்றிதழ் வாங்கியிருப்பவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது. சான்றிதழ் விதிகளின்படி இது தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி.
புகையிலை கரைசல் தயாரித்து பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்போ, பக்கவிளைவோ ஏற்படாது. எனவே விவசாயிகள் குறைந்த செலவில் தயாரித்து பூச்சி, நோய்தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.
இதனை பயன்படுத்தும் முன் ஓட்டும் திரவமான காதி சோப்புக் கரைசலைப் பயன்படுத்தவேண்டும். காதி சோப்பினை ஒரு இரவு தண்ணீரில் ஊறவைத்து அதனோடு இந்த கரைசலையும் சேர்த்து, அதாவது ஒரு லிட்டர் காதி சோப்பு கரைசலுடன் 4 மிலி இந்த கரைசலை நன்கு கலந்து செடிகளுக்கு தெளிக்கவேண்டும்.
இந்த காதி சோப்பு ஓட்டும் கரைசலை பயன்படுத்தினால் தான் நாம் தயாரித்த இந்த தாவர கரைசல் இலைகளின் மேல் நன்றாக ஒட்டிக்கொண்டு சிறந்த பயன்தரும்.
மேலும் பல இயற்கை வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டிகளுக்கு