பொதுவாக கேசரி என்றவுடன் இளஞ்சிகப்பு கேசரி பொடி தான் ஞாபகம் வரும். உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியது இந்த கேசரி பொடி. குங்குமப்பூவினை சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் ஏற்றது இந்த பனிவரகு கேசரி.
என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான பல பல சத்துக்கள் கொண்டா தானியம் நம் பனிவரகு தானியம்.
புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc), நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.
மேலும் பனிவரகின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் – பனிவரகு. மற்ற சிறுதானியங்களை பற்றி தெரிந்துக்கொள்ள – சிறுதானியங்கள்.
தேவையான பொருட்கள்
- ¼ கப் பனிவரகு அரிசி
- ½ கப் பனஞ்சர்க்கரை
- ½ கப் நெய்
- 5 முந்திரிப்பருப்பு
- 5 பாதாம் பருப்பு
- 5 பிஸ்தா
- 1 சிட்டிகை ஏலக்காய்ப் பொடி
- சிறிது குங்குமப்பூ
செய்முறை
- பனிவரகு அரிசியை லேசாக உடைத்துக்கொள்ளவும்.
- அடிகனமான வாணலியில் நெய் விட்டு மிதமான தீயில் பாதாம், பிஸ்தா, முந்திரியை லேசாக வறுத்து எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- அதில் மீதமுள்ள நெய்யை சேர்த்து பனிவரகு குருணையை பொன்னிறமாக வறுக்கவும்.
- வறுத்த பனிவரகு குருணையில் தண்ணீர் 3/4 கப் மற்றும் குங்குமப்பூவை சேர்க்கவும்.
- இந்த கலவை கெட்டியான பின், பனஞ்சர்க்கரையை சேர்க்கவும்.
- பனஞ்சர்க்கரை கரைந்ததும் மீதமுள்ள நெய்யை சேர்க்கவும்.
- பனிவரகு கேசரி இலகத் தொடங்கும்,
- மீதமிருக்கும் நெய்யையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
- வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, எடுத்து பரிமாறலாம். முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவைகளை சேர்க்கவும். பனிவரகு கேசரி தயார்.
பனிவரகு கேசரி