பனிவரகு புட்டு

என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். முடி உதிர்வை தடுத்து கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான பல பல சத்துக்கள் கொண்டா தானியம் நம் பனிவரகு தானியம்.

புரதம் மட்டுமல்லாது, வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாது உப்புகள், துத்தநாகம் (Zinc),  நார்சத்து என அனைத்தையும் சீராக கொண்டுள்ளது பேனிகம் மிலியேசியம் என்ற நம் பனிவரகு. இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது.

Panivaragu-Millet-Proso-Millet in Tamil, Millet

மேலும் பனிவரகின் நன்மைகள், பயன்கள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும் – பனிவரகு.

மற்ற சிறுதானியங்களை பற்றி தெரிந்துக்கொள்ள – சிறுதானியங்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிமையாக தயாரிக்கக்கூடிய சிறந்த மாலை நேர உணவு இந்த பனிவரகு புட்டு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பனிவரகு மாவு
  • ½ கப் வெல்லம் 
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 ஏலக்காய்
  • சிறிது எள்
  • பசு நெய்

செய்முறை

பனிவரகு மாவை சிறிது உப்பு சேர்த்த தண்ணீரினை தெளித்து நன்கு கலக்கவும். 

மாவு சற்று ஈரமாகவும், கட்டிபடாமலும் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு பதினைந்து நிமிடம் வேக‌ விடவும்.

வெந்ததும் இதனுடன் துருவிய‌ வெல்லம், துருவிய‌ தேங்காய், பசு நெய்யில் பொறித்த எள், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். 

தேவையானால் சிறிது பசு நெய்யினை சேர்க்கலாம், கூடுதல் சுவையாக இருக்கும். 

சுவையான‌ சத்தான‌ பனிவரகு புட்டு தயார்.

பனிவரகு புட்டு

என்றும் இளமையுடன் இருக்க சிறந்த உணவாக இருக்கக்கூடியது பனிவரகு சிறுதானியம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எளிமையாக தயாரிக்கக்கூடிய சிறந்த மாலை நேர உணவு இந்த பனிவரகு புட்டு.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 25 minutes
பரிமாறும் அளவு : – 3

தேவையான பொருட்கள்

  • 1 கப் பனிவரகு மாவு
  • ½ கப் வெல்லம் 
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 ஏலக்காய்
  • சிறிது எள்
  • பசு நெய்

செய்முறை

  • பனிவரகு மாவை சிறிது உப்பு சேர்த்த தண்ணீரினை தெளித்து நன்கு கலக்கவும். 
  • மாவு சற்று ஈரமாகவும், கட்டிபடாமலும் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இதனை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு பதினைந்து நிமிடம் வேக‌ விடவும்.
  • வெந்ததும் இதனுடன் துருவிய‌ வெல்லம், துருவிய‌ தேங்காய், பசு நெய்யில் பொறித்த எள், ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும். 
  • தேவையானால் சிறிது பசு நெய்யினை சேர்க்கலாம், கூடுதல் சுவையாக இருக்கும். 
  • சுவையான‌ சத்தான‌ பனிவரகு புட்டு தயார்.