சர்க்கரை நோய், அஜீரணம் உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவு. அடிக்கடி தோன்றும் வயிறு உப்புசம், தொப்பை காணாமல் போகும். பனிவரகு பயன்கள் நன்மைகள், மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் பனி வரகு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கப் நறுக்கிய பீன்ஸ், காரட்
- ஒரு கைபிடி புதினா, கொத்தமல்லி
- உப்பு
- 1 ஸ்பூன் பசு நெய்
- 1 பட்டை
- 1 லவங்கம்
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஏலக்காய்
செய்முறை
வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மண்சட்டியில் சிறிது பசு நெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு ஊறியதும் 20 நிமிடம் ஊறவைத்த பனிவரகு அரிசியை சேர்த்து அதனுடம் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் தேவையான உப்புடன் வேகவிடவும்.
நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
10 நிமிடத்திற்குப் நன்கு கிளறினால் அருமையான பனிவரகு புலாவ் தயார். தேவையானால் முந்திரி வறுத்து சேர்க்கவும்.
பனி வரகு புலாவ்
தேவையான பொருட்கள்
- 1 கப் பனி வரகு
- 1 வெங்காயம்
- 1 தக்காளி
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 கப் நறுக்கிய பீன்ஸ், காரட்
- ஒரு கைபிடி புதினா, கொத்தமல்லி
- உப்பு
- 1 ஸ்பூன் பசு நெய்
- 1 பட்டை
- 1 லவங்கம்
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஏலக்காய்
செய்முறை
- வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு மண்சட்டியில் சிறிது பசு நெய் சேர்த்து பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் தாளித்து வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதங்கியதும் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- இவை அனைத்தும் நன்கு ஊறியதும் 20 நிமிடம் ஊறவைத்த பனிவரகு அரிசியை சேர்த்து அதனுடம் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து சிறு தீயில் தேவையான உப்புடன் வேகவிடவும்.
- நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
- 10 நிமிடத்திற்குப் நன்கு கிளறினால் அருமையான பனிவரகு புலாவ் தயார். தேவையானால் முந்திரி வறுத்து சேர்க்கவும்.