முன்னை மரம் – மூலிகை அறிவோம்

Premna corymbosa; (Munnai) முன்னை; Headache Tree; Agnimandha; Premna serratifolia

முன்னை மரம் என்றுமே பசுமை மாறாத மூலிகை மரம். பழங்காலங்களில் இந்த மரத்தினுடைய கட்டைகளை உரசி தீ மூட்டுவார்கள். இதனுடைய வேர், இலை, பட்டை ஆகியவை மருத்துவ பயனுடையது. முன்னை மரம் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக உள்ளது. குறிப்பாக வாதம் சார்ந்த நோய்கள், வாதத்தினால் ஏற்படும் நோய்களை அகற்றக்கூடியது. உடலில் ஏற்படும் வீக்கத்தை போக்கக்கூடியது.

சுவையின்மை,தொடர்ந்துவரும் ஏப்பம், மயக்கம், பலசிக்கல், மூலம், இரத்த சோகை, அக்கினிமந்தம் ஆகியவற்றை நீங்கும். கபத்தையும், கரப்பானையும் விருத்தி செய்யும். தசமூலதில் ஒரு மூலிகையாக இருக்கக் கூடியது. இதில் பல வகைகளும் உள்ளது.

(7 votes)