பொட்டாசியம் சத்து முக்கியத்துவம்

உடல் இயக்கம் சீராக இருக்க உடலுக்கு சில சத்துக்கள் அவசியமாகிறது. உடல் இயக்கத்திற்கு மாவு சத்துக்களும், புரத சத்துக்களும் அவசியம். அதேப்போல் நரம்புகள், செல்கள் சீராக இயங்க கொழுப்பு சத்துக்களும் அவசியம். அதனைத் தொடர்ந்து வைட்டமின் சத்துக்கள், தாது சத்துக்களும் உடலின் செயல்பாடுகளுக்கும், இயக்கத்திற்கும் அவசியம்.

விட்டமின்கள் சத்துக்கள் போலவே சில மூலகங்களும் உடலுக்கு மிகவும் அவசியம். பொட்டாசியம் சத்துக்களும் இதில் ஒன்று. மனித உடலுக்கு மிகத் தேவையான ஆக்சிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைப் பொட்டாசியம் செய்கிறது. இதயத்தசைக்குச் சக்தியூட்டி, நுரையீரல் விரிந்து உடலுக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்க பொட்டாசியம் உதவும்.

பொட்டாசியம் குறைந்தால் கீழ்க்கண்ட தொந்தரவுகள் ஏற்படும்

  • தசைகள் வலுவிழக்கும்.
  • அளவுக்கு மீறிய சோம்பேறித்தனம் ஏற்படும்.
  • காயங்கள் ஆறத் தாமதமாகும்.
  • வலி ஏற்படும்போது, அவ்வுணர்வு அதிகரிக்கும்.
  • இதயத் தசை பாதிக்கப்படும்.
  • மனக்குழப்பம் ஏற்படுத்தும்.
  • தூக்கமின்மை ஏற்படும்.
  • தலை வழுக்கை ஏற்படுத்த காரணமாகும்.
  • தோலின் ஊசி குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

0.35% பொட்டாசியம் மனித உடலில் உள்ளது. சராசரி வயது மனிதனுக்கு ஒரு நாளைக்கு 5.3 கிராம் பொட்டாசியம் தேவை.

நாம் வழக்கமாக உண்ணும் உணவுகளில் பொட்டாசியம் சத்து நம் உடலுக்குத் தேவையான அளவு கிடைத்து விடுவதால், பொட்டாசியக் குறைபாடு எளிதில் ஏற்பட்டு விடாது. ஆனால், அதிகமான வயிற்றுப் போக்கு, கடும் வாந்தி, சிறுநீரகக் கோளாறுகள், சில மருந்துகளால் ஏற்படும் துணை விளைவுகளின் காரணமாகவே பொட்டாசியம் பற்றாக்குறை ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக அதற்கான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம்.

பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள்

அன்றாடம் பயன்படுத்தும் உப்பு, மூலிகைத் தேநீர், கடற்பாசி உணவுகள், மாங்காய், உலர்ந்த அத்திப்பழம், தேன், திராட்சை, வாழைப் பழம் இவற்றில் அதிகளவில் பொட்டாசியம் சத்துக்கள் உண்டு.
மேலும் தக்காளி, காரட், வெங்காயம், முட்டைக்கோஸ், காலிபிளவர் இவற்றிலும் பொட்டாசியம் உண்டெனினும், அவற்றை நாம் வேக வைத்து உண்ணும்போது 50% பொட்டாசியம் சத்துக்கள் அழிந்து விடுகிறது. அதனால் அன்றாடம் இவற்றை ஒரு சாலடாக தயாரித்து உண்பது சிறந்த பலனை அளிக்கும்.

(1 vote)