கசகசா – பயன்களும் மருத்துவமும்

கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப் படுவதில்லை. பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ள ஒரு அற்புதமான இந்திய உணவுப் பொருள். உடலுக்குக் குளிர்ச்சி தரும் மருத்துவ குணமும் கொண்டது கசகசா. ஆங்கிலத்தில் இதனை “Poppy Seeds” எனப்படும். கசகசாவை அதிகம் உண்டால் மயக்கம் வரும். பல நாடுகளில் கசகசா தடைசெய்யப்பட்ட பொருளும் கூட.

இந்தியாவில் வளரும் கசகசா செடியின் விதையே நம் உணவிலும், மருந்திலும் பயன்படுத்தும் கசகசா. இந்த செடியின் இளம்காயைக் கீறி அதிலிருந்து வடியும் பாலைக் காற்றில் உலர்த்தி எடுப்பதே “அபின்” என்ற லாகிரிப் பொருளாகும். அதனாலேயே பல நாடுகளில் கசகசாவிற்கும் சேர்த்து பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்மை வடு, தழும்பு மாற

பலருக்கும் அம்மை வந்த பின் முகத்திலும் மற்ற இடங்களிலும் வடுக்கள் இருக்கும். அதிலும் முகத்தில் சற்று அதிகமாகவே இருக்கும். இதனை போக்க கசகசா பெரிதும் பயன்படும். ஒரு ஸ்பூன் அளவு கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி நன்கு காய்ந்த பின் கழுவி வர ஒரு வாரத்தில் வடுக்கள், தழும்புகள் மறையும்.

ஓயாது அழும் குழந்தைகளுக்கு

ஓயாமல் அழுகும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவி விட அழகை நிற்கும்.

வயிற்றுப் போக்கிற்கு

கால் ஸ்பூன் அளவு கசகசாலை எடுத்து அதை வாயில் போட்டு நன்றாக மென்று தின்று கொஞ் தண்ணீர் குடிக்க வயிற்றுக் போக்கு நீங்கும்.

தூக்கமின்மைக்கு

தூக்கமின்மையால் பல அவதிப்படுவதுண்டு. அதற்கு ஒரு ஸ்பூன் அளவு கசகசாவை நீரில் ஊறவைத்து நன்கு மைய அரைத்து பசும்பாலுடன் சேர்த்து காய்ச்சி பருக நல்ல தூக்கம் வரும். அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அளவுடன் அவ்வப்பொழுது உண்பது நல்ல பலனை அளிக்கும்.

கூந்தல் வளர்ச்சிக்கு

கசகசாவை சிறிதளவு ஊறவைத்து அதனை நன்கு மைய அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்துவர உடல் உஷ்ணம் குறையும், முடி உதிர்வு குறையும், கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும் மேலும் கூந்தல் கருகருவென்று வளரும்.

தேக அரிப்புக்கு

கசகசாவுடன் கருஞ்சீரகம், காக்காய் கொல்லி விதை, நீர்வெட்டி முத்துப்பருப்பு, தேங்காய்க் கீற்று போன்ற மூலிகைகளை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துத் தேவையான அளவு பூசி தேய்த்துக் குளிக்க உடல் அரிப்பு நீங்கும்.

சருமத்திற்கு

கசகசாவை சிறிதளவு ஊறவைத்து கஸ்தூரிமஞ்சள், குப்பைமேனி இலை சேர்த்து நன்கு மைய அரைத்து முகத்தில் பூசிவரலாம், சருமத்திற்கும் பூசி காய்ந்ததும் குளித்து வரலாம். இதனால் சருமம் பளபளக்கும் சருமத்திலிருக்கும் கரும்புள்ளிகள், திட்டுகள் நீங்கும்.

சீதபேதிக்கு

சுத்தமான கசகசாவை லேசாக வறுத்து, அம்மியில் வைத்து மைபோல் தூள் செய்து சிறிதளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து, கொட்டைப் பாக்களவு காலை, மாலை சாப்பிட சிதபேதிக்கு நல்ல பலனை அளிக்கும்.

(2 votes)