பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பாரம்பரிய சிகப்பரிசி. பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், மாதவிடாய் தொந்தரவுகள் குழந்தையின்மைக்கு சிறந்த மருந்தாக இருக்கும் அரிசி. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகளுக்கும் ஏற்ற அரிசி.
மேலும் பூங்கார் அரிசியைப் பற்றி தெரிந்துக்கொள்ள – பூங்கார் அரிசி.
தேவையான பொருட்கள்
- 1 கப் பூங்கார் அரிசி
- ¼ கப் பாசிப்பருப்பு
- ¼ கப் துவரம் பருப்பு
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 3 பச்சைமிளகாய்
- 1 வெங்காயம்
- 2 தக்காளி
- ¼ கப் காரட், பீன்ஸ், பட்டாணி கலவை
- கடுகு
- பெருங்காயம்
- சோம்பு
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
- பெண்களுக்கு ஏற்ற பூங்கார் அரிசியினை ஆறு மணிநேரம் ஊறவைக்கவும்.
- அனைத்து பருப்பையும் ஒன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- பூங்கார் அரிசியினை ஒரு மண் பானையில் நான்கு கப் தண்ணீர் சேர்த்து அரைமணி நேரம் வேகவிடவும்.
- இந்த நேரத்தில் பூங்கார் அரிசி முக்கால் பதமாக வெந்திருக்கும்.
- பின் பருப்புடன் இஞ்சிபூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, காய்கறிகளுடன் பச்சைமிளகாய் சேர்த்து வேகவிடவும்.
- இவை முக்கால் பதம் வெந்த பின் இதனுடன் முக்கால் பதமாக வெந்திருக்கும் பூங்கார் அரிசியினையும் சேர்த்து வேகவிடவும்.
- வெந்ததும் கடலைப்பருப்பு , துவரம் பருப்பு அங்கங்கே தெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், சோம்பு தாளித்து சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சுவையான பூங்கார் அரிசி கூட்டான்சோறு தயார்.
- இதனை கத்திரிக்காய் தொக்குடன் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
பூங்கார் அரிசி கூட்டான்சோறு
பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பாரம்பரிய சிகப்பரிசி. பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், மாதவிடாய் தொந்தரவுகள் குழந்தையின்மைக்கு சிறந்த மருந்தாக இருக்கும் அரிசி. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகளுக்கும் ஏற்ற அரிசி.
பரிமாறும் அளவு : – 2