பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

சிகப்பு நிற சற்று மோட்டா அரிசியான இந்த பூங்கார் அரிசியினை இருபது வயதைக் கடந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க குழந்தைப்பேறும், சுகப்பிரசவம், சிறப்பான தாய்மையும் உண்டாகும்.

கருப்பையினை பலப்படுத்தும் வகையில் நமது தமிழகத்தின் அரிசி ரகமான பூங்கார் அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள – பூங்கார் அரிசி.

பிரசவித்த பெண்களுக்கு ஏற்றது இந்த பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி. வயிற்றிலிருக்கும் ரணங்களை போகவும், உடலுக்கு தெம்பை அளிக்கவும், தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவும் சிறந்த பூங்கார் கஞ்சி உணவு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூங்கார் அரிசி குருணை
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 5 பற்கள் பூண்டு
  • ¼ கப் தேங்காய் பால்
  • இந்துப்பு

செய்முறை

பூங்கார் அரிசி குருணையை ஒரு கப்பிற்கு ஆறு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒரு மண் பானையில் முதலில் வேகவிடவும்.

பாதிவேக்காடு வெந்த பின் அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

நன்கு வெந்தபின் அடுப்பினை அணைத்து கொதி அடங்கும் வரை மண்பானையினை மூடிவைக்கவும்.

பின் அதில் தேங்காய்ப் பால் இந்துப்பு சேர்த்து அருந்தலாம்.

இதனுடன் புதினா துவையல், கறிவேப்பிலை துவையல், கத்திரிக்காய் தக்காளி தொக்கு சுவையாக இருக்கும்.

பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

பிரசவித்த பெண்களுக்கு சிறந்த கஞ்சி. வயிற்றிலிருக்கும் ரணங்கள் ஆறவும், குழந்தைக்கு தேவையான தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும் உதவும் சிறந்த கஞ்சி.
ஆயத்த நேரம் : – 10 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 40 minutes
பரிமாறும் அளவு : – 2

தேவையான பொருட்கள்

  • 1 கப் பூங்கார் அரிசி குருணை
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 5 பற்கள் பூண்டு
  • ¼ கப் தேங்காய் பால்
  • இந்துப்பு

செய்முறை

  • பூங்கார் அரிசி குருணையை ஒரு கப்பிற்கு ஆறு கப் தண்ணீர் என்ற விகிதத்தில் ஒரு மண் பானையில் முதலில் வேகவிடவும்.
  • பாதிவேக்காடு வெந்த பின் அதில் வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.
  • நன்கு வெந்தபின் அடுப்பினை அணைத்து கொதி அடங்கும் வரை மண்பானையினை மூடிவைக்கவும்.
  • பின் அதில் தேங்காய்ப் பால் இந்துப்பு சேர்த்து அருந்தலாம்.
  • இதனுடன் புதினா துவையல், கறிவேப்பிலை துவையல், கத்திரிக்காய் தக்காளி தொக்கு சுவையாக இருக்கும்.
(1 vote)