Welcome to HealthnOrganicsTamil !!!

பூங்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

குழந்தைப் பிறப்பு என்றதுமே இன்றைய இளைஞர்களுக்கு ஒருவிதமான நெருடலும், மனஉளச்சலும் தோன்றுவது இயல்பாகவே உள்ளது. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாது இந்த நெருடல் உள்ளுக்குள் தோன்றுவது இயற்கையாக மாறிவிட்டது.

காரணம், இன்றைய சமுதாயம் அவர்களின் முந்தைய சமுதாயத்தினரைப் போல் ஆரோக்கியமாக இல்லை என்பதும், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் செயல்பாடுகள் முற்றிலும் மாறுபட்டுள்ளது என்பதுமாகும். 

இருபது வயதைத் தண்டுவதற்கு முன்பே பலபல உடல் உபாதைகளும், கருப்பை தொந்தரவுகளும், மலட்டுத் தன்மையும் இன்று அதிகமாகிவிட்டது. பின் எவ்வாறு திருமணமும், குழந்தைப்பேறும், சுகப்பிரசவமும்?

‘நிலத்தினைப் பக்குவப்படுத்தி நல்விதையினை விதைக்க இயற்கையின் துணையுடன் நல்மணிகளை அறுவடை செய்யலாம்’ என்பது ஊரறிந்த உண்மை. குழந்தையைப் பெற்றெடுக்க கடைசி நேர மருத்துவமும், பராமரிப்பும் எவ்வாறு நல்ல குழந்தைகளை அளிக்கும்?

அதிலும் இன்று திருமணமே பெண்கள் முப்பதுவயதைத் தொடும்பொழுது, அதன் சிலகாலத்திற்குப் பின் வாழ்வில் இருவரும் செட்டில் ஆனதற்கு அப்புறம் குழந்தை என்று வாழ்வை வடிவமைக்க காலமும் குழந்தை என்ற கனவை கனவாகவே மாற்றிவிடுகிறது.

தாய்மை என்பது வாழ்வில் ஒவ்வொரு பெண்ணிற்கும் அடுத்த அத்தியாயத்தை தொடங்கிவைக்கிறது. இயற்கை அதன் பல ரகசியங்களில் வெளிப்படையாக இந்த உலகிற்கு அளித்திருக்கும் அற்புதமான பொக்கிஷம் பெண் அதுவும் தாய்மையை.

ஒவ்வொரு தாயும் உலகம் போற்றும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இந்த ஆசை சாத்தியப்பட இன்றைய சூழல் பலவகைகளில் அவளுக்கு எதிரியாகவே இருக்கிறது.

“மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா” … ஆம் பெண்ணாய்ப் பிறப்பதற்கும், தாய்மை அடைவதற்கும் பெருந் தவமே செய்திட வேண்டும் அதிலும் நன்மக்களை பெற உடலையும், உள்ளத்தையும் பெருந்தவமாக நினைத்து நன்கு பேணிப்பாதுகாக்க வேண்டும். 

ஒவ்வொரு குழந்தையும் பிறப்பதற்கு முன் கருவிலும், கருவுருவாவதிலும் நடப்பதை சற்று உள்நோக்குவோம். 

பெண்ணின் மாதவிடாய் முடிந்த பன்னிரெண்டாவது நாள் முதல் பதினைந்தாவது நாளில் அவளது சினைப்பைகளிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இந்த சினைமுட்டை ஓரிரு நாள் மட்டுமே உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும். உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்தணுக்கள் பெண்ணுறுப்பிற்கு வந்துசேரும். இந்த விந்தணுக்கள் அதிவேகமாக முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஓடும். இது ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வீரியமும், வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை நீந்தி அடையும். இந்த மிகச் சிறிய முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இலட்சக்கணக்கில் நீந்திய விந்தணுக்களில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். மிகுந்த வீரியமுள்ள உயிரணு கருமுட்டைக்குள் நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி. இவ்வாறு ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர கரு உண்டாகும். 

இதிலிருந்து ஒன்றை மிக அழகாக இந்த இயற்கை நமக்கு வெளிக்காட்டுகிறது, அதாவது இந்த தாய்க்கும் (பெண்) தந்தைக்கும் (ஆண்) இடையில் உருவாகும் குழந்தை முழு வீரியத்துடனும், அவர்களின் சிறந்த ஆற்றலுடனும் உருவாகிறது. இவ்வாறு உருவாகும் கருவிற்கு இயற்கையிலேயே நல்ல நோய்எதிர்ப்பு சக்தியும், நல்ல மன, உடல் சக்தியும், தன்னம்பிக்கை, சிறப்பான நற்குணங்களும், சாதிக்கும் தன்மையும் இயற்கையாகவே உருவாகிறது. இந்த குழந்தைகள் பெரும்பாலும் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன.

ஆனால் இன்றைய நிலைமை தலைகீழாகவே உள்ளது, இருபது வயதை அடைவதற்குள் பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு, கருப்பை வளர்ச்சியின்மை, கருப்பைக் கட்டிகள், ஹார்மோன் குறைபாட்டால் கருமுட்டை உற்பத்தி பாதிப்பு, முட்டை வெளியேறுவதில் பிரச்னை, சினைப்பை, கருப்பையில் என்டோமேட்ரியோசிஸ் பிரச்சனை, கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பினால் உண்டாகும் நோய்கள், உடல் பருமன், சர்க்கரை, ரத்த கொதிப்பு, தைராய்டு பிரச்சனை போன்றவை குழந்தைப்பேறுக்கு வில்லன்களாக அமைகிறது.

அதேபோல் ஆண்களுக்கு ஹார்மோன் குறைபாடு,  உயிரணுக்கள் குறைந்தோ அல்லது இல்லாமலோ இருப்பது, உடல் பருமன், நீண்ட கால புகைப்பழக்கம், மதுப்பழக்கம் மற்றும் ஆண்மைக் குறைவு பிரச்சனைகள், அவற்றின் அசையும் திறன் குறைந்திருப்பது, உருவ அமைப்பு குறைபாடு, சர்க்கரை வியாதி மற்றும் மரபுரீதியான நோய்களால் ஏற்படும் குறைபாடுகள், உளவியல் காரணங்கள், உறுப்பில் குறைபாடு மற்றும் நோய்த் தொற்று போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. 

பெரும்பாலும் இவற்றிற்கு காரணம் அவர்களின் உணவுப் பழக்கமும், வாழ்வியல் பழக்கங்களாக இருக்க இந்த தொந்தரவுக்கும், குழந்தைப்பேறுக்கும் நவீன மருத்துவ முறைகளை நாடுகின்றனர்.

செயற்கையாக கருவை அங்கு உருவாக்க அவர்கள் சம்பாதித்த பல லட்சங்களை செலவு செய்ய லட்சத்தில் நீந்திய விந்தணு கருமுட்டையை அடைவதில்லை, ஏதோ ஒரு விந்தணுவை கொண்டு சினைப்படுத்தப்படுகிறது. இவ்வாறு செயற்கையாக சினையூட்டப்பட்ட குழந்தை சற்று வீரியமும், தன்னம்பிக்கையும் குறைந்தே பிற்கால வாழ்க்கையில் காணப்படுகிறது.

குழந்தை பெறுவது என்பது அவர்களின் தலைமுறையினரின் பெயரினையும், பண்பினையும், பாரம்பரியத்தையும் காக்க.. நல்ல சந்ததியினைப் பெற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்களை சிறந்த முறையில் வளப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மனஅழுத்தம், இரவு வேலை, துரித உணவுகள், இறுக்கமான உடை, உடல் பருமன், மடிக்கணினி பயன்பாடு, ஊட்டச்சத்து அற்ற உணவுகள் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்தது. நல்ல பழக்கங்களாலும், நல்ல உணவாலும் இவற்றை எளிதாக அடையலாம். பாரம்பரிய உணவினை உட்கொள்ள உடலில் பலவகையான மாற்றங்கள் நிகழும், அதுமட்டுமல்லாது, பாரம்பரிய உணவுகளை தொடர்ந்து உண்டுவர ஏற்கனவே உள்ள உடல் உபாதைகள், உடல் பருமன், கருப்பை தொந்தரவுகள் குறையும், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு சீராகும். 

பாரம்பரிய உணவுகள் என்ற வரிசையில் நாட்டு பழங்கள், நாட்டு தானியங்கள், பருப்பு வகைகள், அரிசிகள், செக்கில் ஆடிய எண்ணெய் வகைகள், நாட்டு சக்கரை, நாட்டுப்பசும் பால், அருகாமையில் கிடைக்கும் நாட்டு காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை பயன்படுத்தி உண்டுவர சிறந்த உடல் பலத்தைப் பெறலாம்.

பூங்கார் அரிசி

குறிப்பாக பெண்களுக்கு, அதுவும் கருப்பையினை பலப்படுத்தும் வகையில் நமது தமிழகத்தின் அரிசி ரகமான பூங்கார் அரிசி சிறந்து விளங்குகிறது.

பூவினைப் போல் மென்மையான பெண்களுக்கு சிறந்த வாரிசினை உருவாக்க ஏற்ற அரிசி இந்த பூங்கார் அரிசி. அதுவும் பெண்மையைப் போற்றும் தாய்மையை அடையவும், சுகமான சுகப்பிரசவத்திற்கும் ஏற்றது அரிசி இந்த பூங்கார் அரிசி.

பூங்கார் அரிசியின் நிறம், தன்மை

சிகப்பு நிற சற்று மோட்டா அரிசியான இந்த பூங்கார் அரிசியினை இருபது வயதைக் கடந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க குழந்தைப்பேறும், சுகப்பிரசவம், சிறப்பான தாய்மையும் உண்டாகும்.

பூங்கார் அரிசி சத்துக்கள்

உப்பு மண்ணிலும் விளையும் இந்த பூங்கார் அரிசி பலவகையான தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், எண்ணெய்ச்சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, துத்தநாக சத்துக்கள், புரதச் சத்து கொண்டது. பெண்களுக்கு தேவையான இரும்புசத்துக்கள் நிறைந்த சிறந்த அரிசி.

கருப்பை கோளாறுகளை அகற்றும் பூங்கார் அரிசி

இந்த அரிசியினை நாள்தோறும் உணவாக உட்கொள்ள உடல் பருமன், பிசிஓடி (PCOD) தொடங்கி அனைத்து கருப்பை, பெண்கள் தொந்தரவுகளும் விரைவில் விலகும்.

கருத்தரித்திருக்கும் தாய்மார்களுக்கு முதல் மூன்று மாதம் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, பசியின்மை, வாந்தி, மயக்கம், சோம்பல் போன்றவற்றிற்கும் சிறந்த அரிசி இந்த பூங்கார் அரிசி. ஏழாம் மாதம் தொடங்கி இந்த அரிசியில் செய்த பத்தியக்கஞ்சியினைக் கொடுக்க உடலில் சுரக்கும் கெட்ட நீர் வெளியேறும். குருத்தெலும்பினை உறுதியாக்கும்.

பூங்கார் அரிசி உணவு

எந்த இரசாயனமும், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லிகளும் இல்லாது விளையும் இந்த பூங்கார் அரிசியினை மதிய உணவாக குழம்பு, கூட்டு, ரசம் கொண்டு பெண்கள் உண்ண திடமான உடலினைப் பெறலாம்.

பூங்கார் அரிசியினில் புட்டு, இடியப்பம், கொழுக்கட்டை, உப்புமா, இட்லி, தோசை, பணியாரம் என அனைத்து வகையான பலகாரங்களையும் செய்து சுவைக்கலாம்.

ஒவ்வொரு இல்லத்திலும் குட்டி ராஜாக்களும், குட்டி ரணிக்களும் அடியெடுத்து வைக்க சிறந்த அரிசி இந்த பூங்கார் அரிசி. இந்த ராஜாக்களும், ரணிக்களும் கருப்பையில் ஆரோக்கியமாக, சுகந்திரமாக, அழகாக, அமைதியாக வளரவும் ஏற்றது இந்த பூங்கார் அரிசி.

தங்கள் வரவினை அழகாகவும், தாயின் கருப்பையினை பலமாக்கவும் சில சங்கடங்களை முதலில் தாயிக்கு கொடுத்தாலும், தாயின் ஆரோக்கியத்தை வாழ்நாள் முழுவதும் பேணிக்காக்க சுகப்பிரசவத்தினை அளிக்கிறது இந்த பூங்கார் அரிசியின் துணையுடன் ஒவ்வொரு சிசுவும். தாய்மையை பரிசளிக்கும் அரிசி நம் பாரம்பரிய பூங்கார் அரிசி.

3.5/5 - (14 votes)
சிந்தனை துளிகள் :

சொன்னதை விட்டு சுரையைப் பிடுங்குகிற மாதிரி.

You may also like...

1 Response

  1. Matheswari says:

    அருமையான விளக்கம் “பூ போன்ற பெண்களுக்கு பூங்கார்” நன்றி

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!