பூங்கார் அரிசி

தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான பூங்கார் அரிசி பெண்களுக்கு ஏற்ற அரிசி. பெண்களுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டிருக்கும் அரிசி இந்த இளங் சிகப்பு நிற மோட்ட அரிசி. குறைந்த காலத்தில் அதாவது எழுபது நாளில் ஐந்தடிக்கு விளையும் இந்த நெல்லை ஒருமுறை விதைத்தால் இருமுறை அறுவடை செய்யலாம்.

உப்பு மண்ணிலும் சிறப்பாக விளையும் சிறந்த பாரம்பரிய அரிசி. வறட்சி, வெள்ளம் என எந்த இயற்கை சீற்றத்தையும் தாக்குப் பிடித்து வளரும் அற்புதக் கொடை இந்த அற்புதமான பூங்கார். கொடையாக விவசாயிகளுக்கு வருடத்திற்கு ஐந்து முறை சாகுபடி செய்ய உதவும் இந்த பூங்கார் அரிசிக்கு ‘அறுபதாம் கோடை’ என்ற பெயரும் உள்ளது.

உடலுக்கு நல்ல வலிமை அளிக்கும் இந்த பூங்கார் அரிசி குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒரு அரிசி. பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு அரசி.

பூங்கார் அரிசி பயன்கள்

  • நோய் எதிர்ப்பு சத்துக்களை அளிக்கும் அற்புத ரகம்.
  • பெண்களுக்கான பிரத்யேக அரிசி.
  • எலும்புகளை பலப்படுத்தும்.
  • மூட்டுக்களில் ஏற்படும் தொந்தரவுகளுக்கு சிறந்தது.
  • நீரிழிவு, உடல் பருமன் என பல ஹார்மோன் தொந்தரவுகளுக்கு சிறந்தது.
  • அதிக தனிம சத்துக்கள் கொண்டது.
  • திருமணமான பெண்களுக்கு சிறந்தது.
  • ஹீனமோக்ளோபின் அளவினை அதிகரிக்க உதவும்
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.
  • சுகப்பிரசவத்துக்கு உதவும்.
  • தாய்ப்பால் அதிக அளவில் ஊறும்.
  • உடல் கழிவுகளை வெளியேற்றும்.
  • கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வீக்கங்களை போக்கும்.
  • பெண்களுக்கான ஹார்மோன் சுரப்பை துண்டவல்லது.
  • இதிலிருக்கும் துத்தநாக சத்து கெட்ட நீரை அகற்றும்.
  • அஜீரணம், மலச்சிக்கலுக்கு சிறந்தது.

மேலும் பூங்கார் அரிசியின் பல சுவாரசியமான தகவல்கள், மருத்துவ குணங்களை தெரிந்துக் கொள்ள – பூங்கார் அரிசி.

பூங்கார் அரிசியில் இட்லி, தோசை, இடியப்பம், பணியாரம், புட்டு என பல பல பலகாரங்களை எளிமையாக தயாரித்து உண்ண நல்ல பலனை பெறலாம். பூங்கார் அரிசியை சாதமாக வடித்து உண்பது உடல் பருமன், நீரழிவிற்கு சிறந்தது. பூப்பெய்தும் காலங்களில் இந்த அரிசியில் புட்டு செய்து சாப்பிட இடுப்பு வலி, வயிறு வலி, கால் வலி நீங்கும். பூங்கார் அரிசி வடிகஞ்சியைக் கொண்டு பல உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள் உண்பதால் சுகப்பிரசவத்திற்கு அது வழிவகை செய்யும். மேலும் பூங்கார் அரிசியை சாதமாகவும் கர்ப்பிணிகள் தொடர்ந்து பேறுகாலத்தில் உண்பது குழந்தையின் சீரான சிறந்த வளர்ச்சியையும், தாயின் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

சுவையான இந்த பூங்கார் அரிசியில் இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்தது. உடலில் ஏற்படும் பல நோய்களை ஆரம்பத்திலேயே அழிக்கும் ஆற்றல் கொண்ட அரிசி.

பூங்கார் அரிசியை சாதமாக சமைக்கும் முறை

https://youtu.be/Fij1yUFZ3_M
(1 vote)