பூங்கார் அரிசி நீராகாரம்

கர்ப்பிணிகளுக்கு ஏற்ற பூங்கார் அரிசி நீராகாரம்

குறிப்பாக பெண்களுக்கு, அதுவும் கருப்பையினை பலப்படுத்தும் வகையில் நமது தமிழகத்தின் அரிசி ரகமான பூங்கார் அரிசி சிறந்து விளங்குகிறது.

பூவினைப் போல் மென்மையான பெண்களுக்கு சிறந்த வாரிசினை உருவாக்க ஏற்ற அரிசி இந்த பூங்கார் அரிசி. அதுவும் பெண்மையைப் போற்றும் தாய்மையை அடையவும், சுகமான சுகப்பிரசவத்திற்கும் ஏற்றது அரிசி இந்த பூங்கார் அரிசி.

பூங்கார் அரிசி பலவகையான தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், எண்ணெய்ச்சத்துக்களும், சுண்ணாம்பு சத்து, துத்தநாக சத்துக்கள், புரதச் சத்து கொண்டது.

மேலும் பூங்கார் அரிசியினைப் பற்றியும் அதன் சத்துக்கள் நன்மைகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள – பூங்கார் அரிசி.

முதல் மூன்று மாதம் ஏற்படும் மசக்கை அதிகமாக இருக்கும் சமயம் உலர்ந்த நார்த்தங்காயுடன் நீராகாரம், பசு மோர், சிறுதானிய கஞ்சி, மாதுளம் பழம், காய்கறிகள் அல்லது இளநீர் எடுத்துக்கொள்ளலாம். 

https://www.youtube.com/watch?v=Fij1yUFZ3_M

கர்ப்பிணிகளுக்கு சிறந்தது பூங்கார் பாரம்பரிய அரிசி.

இந்த அரிசியினை முதல் நாளே வடித்து நீரூற்றி வைத்து விட வேண்டும். மறுநாள் அதில் மோர் சின்ன வெங்காயம் சேர்த்து கரைத்து உலர்ந்த நார்த்தங்காயுடன் பருக சுவையாக இருக்கும். நாக்கிற்கு தேவையான புளிப்பு சுவையும், நார்த்தங்காய் வாசனையும், உடலுக்கும் வளரும் சிசுவிற்கும் தேவையான சத்துக்கள் இந்த நீரகரத்தில் உள்ளது.   

(1 vote)