பொன்னாங்கண்ணி தைலம்

பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை நாமே வீட்டில் தயாரித்து உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூட்டை தணிக்கும். உடலும் மினுமினுப்புடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • ½ கிலோ பொன்னாங்கண்ணி கீரை சாறு
  • ¾ கிலோ தேங்காய் எண்ணெய்
  • 50 கிராம் சுக்கு
  • 50 கிராம் மிளகு
  • 50 கிராம் திப்பிலி
  • 50 கிராம் சித்தரத்தை
  • 50 கிராம் அமுக்கிராங்கிழங்கு
  • 50 கிராம் குறுந்தொட்டி
  • 50 கிராம் கொம்பு அரக்கு
  • 50 கிராம் செம்பருத்தி பூ

செய்முறை

  • நல்ல பசுமையான பொன்னாங்கண்ணிக் கீரையை வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து இடித்து அரை கிலோ சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் சுத்தமான முக்கால் கிலோ தேங்காய் எண்ணெயையும் அதில் சேர்த்து களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் ஊற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அமுக்கிராங்கிழங்கு, குறுந்தொட்டி, கொம்பு அரக்கு, செம்பருத்தி பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் சேகரித்து அம்மியில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • அரைத்த அனைத்தையும் கலந்து வைத்துள்ள கலவையில் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிய விடவேண்டும்.
  • சரக்குகள் எண்ணெயில் வெந்து நன்கு சிவந்து வந்ததும் கீழே இறக்கி விட வேண்டும்.

  • சூடு ஆறியபின் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை சிறிது எடுத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால் உடல் நலமாக இருக்கும்.
5 from 4 votes

ஆயத்த நேரம் : – 30 minutes
சமைக்கும் நேரம் : – 30 minutes
மொத்த நேரம் : – 1 hour

3 thoughts on “பொன்னாங்கண்ணி தைலம்

  1. மாலா

    5 stars
    நன்றி

Comments are closed.