பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை நாமே வீட்டில் தயாரித்து உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூட்டை தணிக்கும். உடலும் மினுமினுப்புடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ½ கிலோ பொன்னாங்கண்ணி கீரை சாறு
- ¾ கிலோ தேங்காய் எண்ணெய்
- 50 கிராம் சுக்கு
- 50 கிராம் மிளகு
- 50 கிராம் திப்பிலி
- 50 கிராம் சித்தரத்தை
- 50 கிராம் அமுக்கிரா கிழங்கு
- 50 கிராம் குறுந்தொட்டி
- 50 கிராம் கொம்பு அரக்கு
- 50 கிராம் செம்பருத்தி பூ
செய்முறை
- நல்ல பசுமையான பொன்னாங்கண்ணிக் கீரையை வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து இடித்து அரை கிலோ சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் சுத்தமான முக்கால் கிலோ தேங்காய் எண்ணெயையும் அதில் சேர்த்து களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் ஊற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கு, குறுந்தொட்டி, கொம்பு அரக்கு, செம்பருத்தி பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் சேர்த்து அம்மியில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த அனைத்தையும் கலந்து வைத்துள்ள கலவையில் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிய விடவேண்டும்.
- சரக்குகள் எண்ணெயில் வெந்து நன்கு சிவந்து வந்ததும் கீழே இறக்கி விட வேண்டும்.
- சூடு ஆறியபின் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை சிறிது எடுத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால் உடல் நலமாக இருக்கும்.
பொன்னாங்கண்ணி தைலம்
பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை நாமே வீட்டில் தயாரித்து உடலில் தேய்த்து குளித்தால் உடல் சூட்டை தணிக்கும். உடலும் மினுமினுப்புடன் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ½ கிலோ பொன்னாங்கண்ணி கீரை சாறு
- ¾ கிலோ தேங்காய் எண்ணெய்
- 50 கிராம் சுக்கு
- 50 கிராம் மிளகு
- 50 கிராம் திப்பிலி
- 50 கிராம் சித்தரத்தை
- 50 கிராம் அமுக்கிராங்கிழங்கு
- 50 கிராம் குறுந்தொட்டி
- 50 கிராம் கொம்பு அரக்கு
- 50 கிராம் செம்பருத்தி பூ
செய்முறை
- நல்ல பசுமையான பொன்னாங்கண்ணிக் கீரையை வாங்கி வந்து நன்கு சுத்தம் செய்து இடித்து அரை கிலோ சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் சுத்தமான முக்கால் கிலோ தேங்காய் எண்ணெயையும் அதில் சேர்த்து களிம்பு ஏறாத ஒரு பாத்திரத்தில் ஊற்றி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, அமுக்கிராங்கிழங்கு, குறுந்தொட்டி, கொம்பு அரக்கு, செம்பருத்தி பூ ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் வீதம் சேகரித்து அம்மியில் வைத்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்த அனைத்தையும் கலந்து வைத்துள்ள கலவையில் போட்டு நன்கு கலக்கி அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிய விடவேண்டும்.
- சரக்குகள் எண்ணெயில் வெந்து நன்கு சிவந்து வந்ததும் கீழே இறக்கி விட வேண்டும்.
- சூடு ஆறியபின் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் ஊற்றி மூடி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- இந்த பொன்னாங்கண்ணிக் கீரை தைலத்தை சிறிது எடுத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வந்தால் உடல் நலமாக இருக்கும்.
நன்றி
Use full
Thank u