செங்கொடிவேலி மூலிகை அறிவோம்

Plumbago indica, செங்கொடிவேலி, சிவப்பு சித்திர மூலம்.
இது ஒரு காயகல்ப மூலிகை ஆகும். இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் பாம்பு நெருங்காது.

இதன் மருத்துவ குணங்கள் வியர்வை பெருக்குதல், முறைநோய் தீர்த்தல், நாடி நடையை மிகுத்து உடல் வெப்பம் தருதல், மாதவிலக்கைத் தூண்டுதல், உமிழ்நீர் சுரப்பித்தல், தாது அளழுகலைக் கட்டுப்படுத்துதல் ஆகியவையாகும்.

  • இதன் வேர்ப்பட்டையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு அரைக்காற்படி பசும் பாலிலோ வெள்ளாட்டுப் பாலிலோ வியாதியின் வலிமைக்குத் தக்கதாய் ஒருமண்டலம் அல்லது அரைமண்டலம் கொள்ள சுரம், வெட்டை, அரையாப்பு, வாயு, சூலைக்கட்டு, சூலைபிடிப்பு, வெடிசூலை, மேனியிற் கரடுமுரடாய்க் கட்டுஞ்சூலை, உள்மூலம், கர்ப்பத்தை அழிக்குங்கிரந்தி, யோனியைத்தின்னும் கிரந்தி, செங்கிரந்தி, கருங்கிரந்தி, அரிகிரந்தி, கருவாப்பு, வாயு தீரும். மேனி பொன்போலாகும். புளிதள்ளவும் பாலும் அன்னமுமாய்ப் பத்தியம் கொள்ளவும்.
  • இதன் வேரில் பிளம்பகின், சுக்ரோஸ், பிரக்டோஸ், புரோட்டேஸ் போன்ற பொருட்கள் காணப்படுகிறது. இது நாள்ப்பட்ட சுவாச கருவிகளில் ஏற்படும் பிரச்சனை, மூச்சிகுழாய் ஆழற்ச்சி, வாதம் போன்றவைகளை குணப்படுத்துகிறது.
  • மேலும் காசநோய், இருமல், ஆஸ்துமா, குளிர் இவற்றை குணப்படுத்துகிறது. மேலும் வயிற்றுக் கிருமிகளை கொல்லுதல், ஜீரணசக்தியைத் தூண்டுதல் போனறவற்றை செய்கிறது.
  • மேலும் உடம்பில் வெள்ளை விழுதல், வயறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, உடம்பில் ஏற்படும் வீக்கம், ஆழற்ச்சி ஆகியவற்றை குணமாக்குகிறது.
  • இது உடம்பில் உள்ள விஷத்தன்மையான பொருட்களை அகற்றி, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்க்கு உதவி புரிகிறது.
  • இது உடல் எடையை குறைத்து, உடல் திரவத்தை சமநிலை படுத்துகிறது.
  • இதன் வேரிலிருந்து எடுக்கப்படும் களிம்பு குஸ்டரோகம், புண், ஆரோக்கியமற்ற காயம் இவற்றை குணப்படுத்துகிறது இந்த மூலிகையின் கஷாயத்தை கர்ப்ப காலத்தில் பயன்படுத்தினால் கர்ப்பம் கலையும்.
(1 vote)