விதைகளைப்பற்றி பல பல செய்திகளையும், விதைகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் பற்றிய பல அறிய செய்திகளை இதுவரை பார்த்தோம். இந்த பதிவில் விதை விதைக்க ஏற்ற நாட்களை கீழிருக்கும் இணைப்பிலிருந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிறக்கம் செய்து அறிந்துக்கொள்ளலாம்.
- விதைகளைப் பற்றிய அறிமுகம் – விதைகள்…
- விதைகளும் நமது முன்னோர்களின் அறிவியலையும் தெரிந்துக்கொள்ள – விதைகளும் விழாக்களும்….
- நாட்டு விதைகள் / மரபு விதைகள் – காய்கறி விதைகள், கீரை விதைகள்…
- இனி விதைகளே பேராயுதம் – விதைகளே பேராயுதம்…
- விதைகளும் அதன் வகைகளும் (நாட்டு விதைகள், ஒட்டு விதைகள்…) – விதைகளும் வகைகளும்…
- மரபணு மாற்று விதைகள், பயிர்கள் – மரபணு மாற்று பயிர்கள்…
- நாட்டு காய்கறி விதைகளின் பட்டங்கள் ( ஆடிப்பட்டம், மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் ) – விதைகளும் பட்டமும்…
- நாட்டு விதைகளை எளிதாக கிராமங்களில் பெறலாம் – கிராமங்களில் நாட்டு விதைகள்…
- விதை நேர்த்தி என்றால் என்ன?
- விதை நேர்த்தி செய்வது எப்படி
எந்தெந்த நாட்களிலெல்லாம் விதைகளை விதைப்பது
விதைகளை விதைக்க நமது முன்னோர்கள் காலநேரங்களை வைத்திருந்தனர். அமாவாசை, பௌர்ணமி, வளர்பிறை, தேய்பிறை போன்ற நாட்களை சந்திரனின் சுழற்சியைக்கொண்டு கணித்து விதைகளை விதைப்பது, உரமளிப்பது, அறுவடை செய்வது போன்றவற்றை செய்தனர்.
Tamil Planting Calendar – India 2024
Planting Calendar – India – 2024 – English
மதசார்பில்லாமல் சந்திரன், பூமி மற்றும் நம்மை சுற்றி இருக்கும் கிரகங்களின் சுழற்சியினைக் கொண்டு இவற்றை செய்தனர். இன்றும் இவ்வாறான விவசாய பஞ்சங்கத்தை பல நாட்டினரும் நடைமுறையில் கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் விதைக்கும் நாட்கள் தொடங்கி செடிகளுக்கு தேவையான பலவற்றை கணித்துள்ளனர். இந்தாண்டின் நாள்கட்டியினை இந்த வலைதளத்திலிருந்து கீழுள்ள இணைப்பில் நேரடியாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.