பித்தம் தீர சில வழிகள்

பித்தம் அதிகரித்தால் பல உடல் உபாதைகள் ஏற்படும். மயக்கம், தலை சுற்றல் பொதுவானது என்றாலும் பல நாள் பட்ட நோய்களுக்கும் இது காரணமாக உள்ளது. அதனால் அவ்வப்போது பித்தத்தை குறைக்க சில எளிய வழிமுறைகளை வீட்டில் கையாள்வது அவசியம். பச்சை நிற பித்தம் கல்லீரல் சார்ந்த பாதிப்புகளையும், கண்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கும் காரணமாகவும் உள்ளது.

  • மாதம் ஒரு முறை பித்தத்தை வெளியேற்ற காலையில் வாந்தி எடுப்பது நல்ல பலனை, அதிலும் உடனடி பலனை அளிக்கும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டருக்கும் அதிகமாக வெதுவெதுப்பான நீரை பருக வேண்டும். வயிறு முட்ட வாந்தி வருமளவு நீரைப் பருக வேண்டும். சில நிமிடங்களில் வாந்தி வரவில்லை என்றால் நமது கை விரலில் நடுவிரலை தொண்டை பகுதியில் விட உடனடியாக பச்சை பச்சையாக வாந்தி வரும். பித்த நீரை வெளியேற்ற சிறந்த வழி இது, ஆனால் அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. முடிந்தவர்கள் செய்யலாம். மற்றவர்கள் கீழிருக்கும் மற்ற தீர்வுகளை செய்யலாம்.
  • நார்த்தை இலையில் வேப்பிலைக் கட்டி தயாரித்து வைத்துக் கொண்டு அன்றாடம் மோரில் கலந்து பருகலாம். எலுமிச்சை இலையையும் இவ்வாறு மோரில் கலந்து பருகலாம்.
  • வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் காலையில் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, வெங்காய சாறு ஆகியவற்றை தேன் கலந்து அல்லது எலுமிச்சை சாதம் உண்ண பலன் கிடைக்கும், பித்தம் குறையும்.
  • அரச மர குச்சியை காய்ச்சி தேன் கலந்து அந்த நீரை பருக இரத்தத்தில் உள்ள பித்தம் தீரும். சீதேவி செங்கழுநீர் கசாயம், ரோஜாப்பூ கசாயம் பருகவும் நல்ல பலன் கிடைக்கும், பித்த நீர் வெளியேறும்.
  • தொடர்ந்து இரண்டு மாதம் காலையில் தேன் இஞ்சி உண்டுவர பித்தம் தீரும்.
  • விளாம்பழம் பித்தத்தைக் குறைக்க நல்ல பழம், கிடைக்கும் காலங்களில் அன்றாடம் ஒன்று உண்ணலாம். இதனால் இரும்பு சத்துக்கள், சுண்ணாம்பு சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.
(13 votes)

1 thought on “பித்தம் தீர சில வழிகள்

Comments are closed.