பிரண்டைத் துவையல்

உடலுக்கு நல்ல ஒரு பலத்தையும் வலுவையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான துவையல் இந்த பிரண்டை துவையல். நாற்பத்தி எட்டு நாட்கள் பிரண்டையை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள எப்பேர்ப்பட்ட மூட்டு சார்ந்த பிரச்சனைகள், மூட்டுவலிகள், வாத நோயும் பறந்து ஓடிவிடும். மேலும் பிரண்டையின் பயன்கள், நன்மைகள் மற்றும் அதனை பிரண்டை வீட்டிலேயே எளிமையாக வளர்க்கும் முறைகளையும் இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்

  • 5 துண்டு பிரண்டை
  • 3 சில் (துண்டு) தேங்காய்
  • 2 வர மிளகாய்
  • 5 பல் பூண்டு
  • ஒரு சுளை குடம்புளி (கொடம்புளி)
  • தேவைக்கேற்ப உப்பு
  • 1 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

  • பிரண்டையில் முதலில் பிஞ்சு பிரண்டையை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதாவது நுனிப்பகுதி 3 கணக்கை மட்டுமே எடுத்துக்கொள்ள எடுத்துக் கொள்வது சிறந்தது.
  • பிரண்டையின் கணுக்களை நீக்கிவிட்டு துண்டுகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • பின் இந்த பிரண்டைத் துண்டுகளை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பின் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு அதில் பிரண்டைத் துண்டுகளை வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • நன்கு பிரண்டை வதங்கியதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
  • பின் புதிதாக எடுத்த தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

pirandai, health n organics,

  • வதக்கிய பிரண்டையுடன் சிறிதாக நறுக்கி எடுத்துக் கொண்ட தேங்காய், வர மிளகாய், பூண்டு, கொடம்புளி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • அவ்வளவு தான் சுவையான நல்ல சத்தான பிரண்டை துவையல் தயார்.
  • பிரண்டையைத் தவிர மற்ற பொருட்களை அடுப்பில் இடாமல் இந்த துவையலை அரைப்பதால் கூடுதல் சத்துக்களையும், உயிர்சத்துக்களையும் பெற முடியும்.

பிரண்டைத் துவையல்

உடலுக்கு நல்ல ஒரு பலத்தையும் வலுவையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான துவையல் இந்த பிரண்டை துவையல். நாற்பத்தி எட்டு நாட்கள் பிரண்டையை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள எப்பேர்ப்பட்ட மூட்டு சார்ந்த பிரச்சனைகள், மூட்டுவலிகள், வாத நோயும் பறந்து ஓடிவிடும்.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes