பிரண்டை – மூலிகை அறிவோம்

பிரண்டை தமிழ் மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஒரு மூலிகை. பிரண்டை மிகவும் அற்புதமான ஒரு மூலிகையாகும். உடலின் எந்த பகுதியில் என்ன ஏற்பட்டாலும் அதனை அகற்றும் ஆற்றல் பிரண்டைக்கு உண்டு.

வஜ்ராவல்லி என்ற இந்த பிரண்டை உடலில் வரும் எலும்பு சார்ந்த நோய்களுக்கு சிறந்த மருந்து. பெண்கள் வாரம் ஒருமுறை இதனை எடுத்துக்கொள்ள எலும்பு சார்ந்த நோய்கள் நீங்கும்.

பிரண்டைத் துவையல் சாப்பிடாத மக்களே இல்லை எனலாம். சென்னை போன்ற பெருநகரங்களில் பிறந்து வளர்ந்து கிராமப்புறங்களையே பார்க்காதவர்கள் ஒரு கால் பிரண்டையைப் பற்றி அறியாமல் இருக்கக்கூடும்.

பிரண்டைக் துவையல் அஜீரணக் கோளாறுகளைக் துரிதமாக நீக்கும். பசியை தோற்றுவிக்கும். அருசியை அகற்றும். பிரண்டையை துவையல், பிரண்டை தோசை என பலவகைகளில் உணவாக பயன்படுத்தலாம்.

முறிந்த எலும்புகள் கூடுவதற்கு பிரண்டையின் சாறு நிச்சயமான ஒரு மருந்தாகும். அடிபட்டதனால் ஏற்படும் வீக்கம், கட்டிகள் மற்றும் எல்லாவிதமான வீக்கங்களுக்கும் பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து புளி, உப்பு சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி பொறுக்கும் சூட்டுடன் தடவினால் ஆச்சரியப்படும் விதத்தில் பூரண குணம் ஏற்படும்.