சந்திரனின் பிறைகளைப் போல் அதிலும் பிற சந்திரன் போல் உடலை வளைக்கும் ஒரு ஆசனம் பிறையாசனம். உடலை பின்னோக்கி வளைத்தால் நிலவின் பிறைப் போல் தெரியும். அதனாலேயே இதற்கு பிறையாசனம் என பெயர். அதுமட்டுமில்லாமல் பிறைகளில் உயர்ந்தது மூன்றாம் பிறை. அமாவாசையிலிருந்து மூன்றாவது நாளில் வரும் பிறை சந்திரனைப் பார்க்க பல நன்மைகள் ஏற்படும். இந்த நன்மைகளுக்கு இணையான நன்மைகளைக் கொடுக்கும் ஆசனம் என்பதாலும் இதற்கு பிறை ஆசனம் என்று பெயர்.
பிறையாசனத்தை செய்வதால் முடுகு தண்டு தொந்தரவுகள், வலிகள், கழுத்துப்பிடிப்பு, முழங்கால், மூட்டு வலி, உடல் பருமன், நரம்பு தளர்ச்சி போன்ற தொந்தரவுகள் தீரும். உடல் வலுபெறும்.
பிறை ஆசனம் செய்முறை
தரை விரிப்பில் முதலில் நேராக கால்களையும் கைகளையும் வைத்து நிமிர்ந்து நிற்கவேண்டும். பின் இரண்டு கால்களையும் சற்று அகட்டி பக்கவாட்டில் வைக்க வேண்டும். பின் இரு கைகளையும் முதுகுக்குப் பின் எடுத்து சென்று விரல்களை மேல்நோக்கி வைத்து இடுப்பு, தோள்பட்டை, தலை, முழங்கால் ஆகிய பாகங்களை பின்னோக்கி மேலிருந்து கீழாக ஒவ்வொன்றாக வளைக்க வேண்டும். இந்த ஆசனத்தில் பத்து வினாடிகள் இயல்பான சுவாசத்தில் இருந்து பின் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். தொடர் பயிற்சியால் பின்னோக்கி இருக்கும் கைகள் கால்களை தொட சிறந்த பலனைப் பெறலாம்.
முதுகுவலிக்கு சிறந்த ஆசனம்
கழுத்து, தோள்பட்டை, முடுகு, இடுப்பில் வரும் பல தொந்தரவுகளுக்கு மிக சிறந்த பலனை விரைவாக இந்த ஆசனத்தின் மூலம் பெறலாம். அதிக தூரம் இருசக்கர வாகனத்தில் பயனிப்பவற்களுக்கும், அதிகமாக வேளை செய்யும் பெண்களுக்கும் சிறந்த ஆசனம்.
தண்டுவடம் பலப்படும்
நமது தண்டுவடத்தில் இருக்கும் பல எலும்புகள், நரம்புகளுக்கு போதுமான அசைவுகளை நாம் பெரும்பாலும் அளிப்பதில்லை. இதனால் சீரான இரத்த ஓட்டம் அந்த இடங்களில் பதிப்பை ஏற்படுத்தும். உடலை பின்னோக்கி வளைப்பதால் இந்த பாதிப்புகளைப் போக்கவும் அந்த இடத்தில் இருக்கும் எலும்புகள், நரம்புகளுக்கு பலமளிக்கவும் சிறந்த ஆசனம்.
உடல் பருமன், தொந்தி குறைய
பின்னோக்கி உடலை வளைப்பதால் கழுத்து, தோள் பட்டையுடன் வயிற்றுப் பகுதியும் சேர்ந்து வளைகிறது. இதனால் வயிற்றில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பு, சதை மற்றும் தொந்தி குறையும்.
யார் பிறையாசனத்தை செய்யலாம்?
அனைவருக்கும் ஏற்ற ஆசனம். குழந்தைகள் முதல் அனைவரும் இதனை செய்யலாம்.
யார் பிறையாசனத்தை செய்யக் கூடாது?
- குழந்தைப் பெற்ற தாய்மார்கள் சில மாதங்கள் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது. அதிலும் அடி வயிற்று தையல் உள்ளவர்கள் சில மாதங்கள் இதனை தவிர்க்க வேண்டும்.
- அறுவை சிகிச்சை செய்தவர்கள் இதனை செய்யக் கூடாது.
- இருதய நோய்கள், இருதய கோளாறு உள்ளவர்கள் செய்யக் கூடாது.