புண்ணாக்கு கீரை – நம் மூலிகை அறிவோம்

புண்ணாக்கு கீரை, பிண்ணாக்கு கீரை; Corchorus aestuans

நீண்டு உருண்டை வடிவத்தில் இலைகளை கொண்ட இந்த பிண்ணாக்குக் கீரை பட்டையான காய்களையும், சிகப்பு நிற தண்டினையும் மஞ்சள் நிற பூக்களையும் கொண்ட ஒரு சிறு செடி. தமிழகமெங்கும் இந்த கீரை பயிர்களுக்கு இடையில் களையாக வளருவதுண்டு. புண்ணாக்கு பூண்டு என்றும் இதனை புண்ணாக்கி, புண்ணாக்கு கீரை என்றும் குறிப்பிடுவதுண்டு. இதன் இலைகள் மருத்துவப் பயனுடையது.

பருப்பு சாதத்தில் நெய்யோடு இந்த பிண்ணாக்கு கீரையை சேர்த்து சாப்பிட்டு வர உடல்சூடு, சீதபேதி, ரத்த பேதி, வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள் தீரும்.

இந்த கீரை உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். இதனை சமையல் செய்து சாப்பிட்டால் வாயுவைக் கலைத்து குடலுக்கும், உடலுக்கும் வலிமையை தரும். மலச்சிக்கல், சிறுநீரகம் போன்ற கோளாறுகளுக்கு இந்த கீரை சிறந்தது.

புற்று நோய் சார்ந்த பிரச்சனைகள் சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த ஒரு கீரை இது. பழுதடைந்த உடல் செல்களை புதுப்பிக்கும் ஒரு அற்புதமான கீரை. உடலுக்கு தீங்கிழைக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

நார்ச்சத்துக்கள் கொண்ட இந்த கீரை செரிமானம் சார்ந்த பிரச்சனைகளுக்கு சிறந்தது. வயிற்றுப்புண் நீங்கும். இதன் இலைகள் மற்றும் வேர்கள் பால்வினை நோய்களுக்கு நல்லது.

பிண்ணாக்குக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. இதனால் சொறி சிரங்கு போன்ற நோய்கள் உண்டாகலாம். வாத நோய் கண்டவர்களும் தவிர்ப்பது சிறந்தது. சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த இந்த கீரை மூட்டுகளுக்கு சிறந்தது.

(26 votes)

2 thoughts on “புண்ணாக்கு கீரை – நம் மூலிகை அறிவோம்

  1. Venkatesh

    Vithai eangu kidaikum

    1. admin Post author

      காய்கறி விதை சில உள்ளது.. என்ன விதை தேவை

Comments are closed.