அன்னாசிப் பழம் அதிக குடு. சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் பலவாறு கருத்துக்கள் உள்ளது. பொதுவாக அன்னாசிப் பழம் வெயில் காலங்களில் தான் அதிகளவு கிடைக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது. மாம்பழம், ஆரஞ்சு பழம் போன்றவற்றில் உள்ள அதே வெப்ப அளவான 14 காலரியே அன்னாசியிலும் உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் புளியின் வெப்ப அளவு 82 காலரி ஆகும்.
அன்னசியில் அதிகளவு வைட்டமின் சத்துக்களும், தாது சத்துக்களும் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் பழமும் இது. உடலில் ஏற்படும் வீக்கங்கள், வாதத்தால் ஏற்படும் பதிப்புகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். செரிமான மண்டலத்தில் வரும் பல தொந்தரவுகளுக்கும் சிறந்த பலனை அளிக்கும்.
20 கிராம் எடையுள்ள அன்னாசிப் பழத்தில் உள்ள உயிர்ச் சத்துக்கள்
வைட்டமின் ஏ 17 மி.கி.
வைட்டமின் பி-2-0.34 மி.கி.
வைட்டமின் சி 0.18மி.கி.
சுண்ணாம்புச்சத்து -6 மி.கி.
இரும்புச்சத்து 0.3 கி.
அன்னாசிப் பழம் கண்டிக்கும் முக்கிய நோய்கள்
எல்லாவித கண் நோய்கள், எல்லாவித காது நோய்கள், எல்லாவித பல் நோய்கள், ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்ற நோய்களை அன்னாசிப் பழம் கண்டிக்கும். தேனும், அன்னாசிப்பமும் சேர்த்துச் செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது இந்நோய்களை விரைவில் விரட்டும்.
மஞ்சட்காமாலை
கல்லீரலுக்கு பலமளிக்கும் சிறந்த பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். மஞ்சட்காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு.
இரத்தத்தை அதிகரிக்கும்
இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசிச் சிறந்த ‘டானிக்’.
பித்த சம்பந்தமான கோளாறுகளுக்கு
பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக வரும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன்.
வெள்ளை நோய்க்கு
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் சீராக அன்னாசி உதவும்.
இரத்தத்தை சுத்தம் செய்யும்
இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு. தொடர்ந்து 40 நாட்கள் இப்பழத்தை உண்பவர்கள் உடலில் ஆரோக்கியமான பளபளப்பு ஏற்படும்.
தாகத்தை தணிக்கும்
தீராத கோடை தாகத்தைத் தணிக்கும் ஆற்றல் அன்னாசிப் பழச்சாறுக்கு உண்டு.