rosewater-acne-home-remedy

முகப்பரு – PIMPLES – ACNE

பன்னீர்

rosewater-acne-home-remedy

சிறிதளவு பஞ்சு எடுத்து பன்னீரில் நனைத்து அதனால் ஒரு நாளைக்கு 2-3 முறை முகத்தை சுத்தம் செய்ய முகப்பரு பரவாமல் விரைவில் நீங்கும். சருமத்திற்கும் முகத்திற்கும் கண்டிப்பாக சோப் உபயோகிக்கக் கூடாது. மேலும் இன்று கடைகளில் கிடைக்கும் பன்னீர் செயற்கையாக இரசாயனங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது, இதனால் செயற்கைப் பன்னீர் உபயோகிக்காமல் ரோஜா இதழ்களைக் கொண்டு வீட்டிலேயே பன்னீர் தயாரித்துப் பயன்படுத்தலாம்.

ஆரஞ்சுப் பழ தோல்

ORANGE-PEEL-acne-home-remedy

ஆரஞ்சுப் பழத்தின் தோல் முகப்பருவைப் போக்க நல்ல பயனளிக்கக் கூடியது. இதனை சிறிதளவு நீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுகள் கிடைக்கும் காலத்தில் பழத்தை உண்ட பின் தோலை வீணாக்காமல் நிழலில் உலர்த்தி, பொடி செய்து, ஒரு மெல்லிய துணியில் சலித்து இந்தப் பொடியை உலர்ந்த பாத்திரத்தில் காற்று புகாதவாறு நன்கு மூடி வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது உபயோகப்படுத்தலாம்.

பட்டை தூள்

Cinnamon-acne-home-remedy

சிறிதளவு பட்டையை நன்றாக, மிக சன்னமாக பொடி செய்து சலித்து அதில் ஒரு ஸ்பூன் பட்டை பொடிக்கு 1 ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு என்ற அளவில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் அடிக்கடி தடவி வர முகப்பரு விரைவில் மறையும். முகம் பளபளக்கும்.

பூண்டு

GARLIC-ACNE-HOME-REMEDY

பூண்டு பல் எடுத்து அதனை தட்டி சாறு எடுத்து சாற்றை முகத்தில் ஒரு நாளைக்கு 2 முறை என தடவலாம். இது கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் வீக்கம், வலியையும் குறைக்கும். இரத்த ஓட்டத்தையும் சீராக்கும்.

வேப்பிலை

neem-leaves-homeremedy-acne

வேப்பிலையை நன்றாக விழுதாகும் வரை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வரவும் பருக்கள் மறையும், தழும்புகள் நீங்கும்.

சந்தனம், மஞ்சள்

சந்தனம், மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்து தண்ணீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வரலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு மறைவதுடன் முகப் பளபளப்பு அதிகரிக்கும்.

மிளகு

pepper-oil-acne-home-remedy

முகப்பரு வையும், அதன் விளைவுகளையும் போக்கும் மற்றொரு அருமருந்து மிளகு. நல்லெண்ணெயில் மிளகை பொரித்து அந்த மிளகு பொரித்த நல்லெண்ணையை இரவில் பருக்களின் மீது தடவி காலையில் சீயக்காய் போட்டு கழுவ மிக சிறந்த பலனைப் பெறலாம்..

(1 vote)