நன்மை செய்யும் பூச்சிகள்

நன்மை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் உண்ணும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம்.

பொறிவண்டு.. தோட்டம் வைத்திருப்பவரின் நெருங்கிய நண்பன் இவ்வகை பொறிவண்டுகள். அஸ்வினி பூச்சிகளை விழுங்கக்கூடியது. மேலும் அஸ்வினிகளின் இனப்பெருக்கத்தையும் குஞ்சுகளையும் விழுங்கக்கூடியது. சிறிதாக இருக்கும் இவை, ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், இவற்றின் மேல் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும். இந்த பொறிவண்டின் இளம் புழுக்கள் முதல் பொறிவண்டு வரை அனைத்தும் அஸ்வினியை சார்ந்தே உள்ளது. இதனால் பெருமளவில் அஸ்வினிகள் இனப்பெருக்கம் குறைகிறது.

இந்த பொறிவண்டுகளில் இரண்டு வகை உண்டு.. ஒன்று போலி அதாவது தீமை செய்பவை.. மற்றொன்று நன்மை செய்பவை. நன்மை செய்யும் பொறிவண்டின் முதுகில் 10-12 வரை புள்ளிகள் இருக்கும். புள்ளிகளின் எண்ணிக்கை 12க்கு மேல் இருந்தால் அது போலி பொறிவண்டு.

அடுத்ததாக குளவிகள்.. குளவிகள் பல சேதத்தை தரும் பச்சை காய்புழுக்களை பிடித்து அதன் கூட்டுக்குள் போட்டுவிடும். இவற்றின் மேல் முட்டைகளை இடும். வெளிவரும் குலவியின் புழுக்களுக்கு இந்த பச்சை காய் புழுக்கள் இரையாகும்.

அதேபோல் நீள் கொம்பு வெட்டுக்கிளி, பெருமாள் பூச்சி அல்லது கும்பிடு பூச்சி (தொழுவெட்டுக்கிளி) போன்றவை காய்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் புழுக்களை இரையாகக் கொள்ளக்கூடியது.

தட்டான்கள்.. அனைவருக்கும் விருப்பமான தட்டான்கள் பூச்சிகள் விழுங்கும் நண்பனுமாகும்.

அனைவருக்கும் தொந்தரவை அளிக்கும் சிலந்திகள் சிறந்த பூச்சி விழுங்கி. பூச்சிகளை பிடித்து தனது வலையில் சிக்க வைக்கும் சிலந்திகளில் சிலவகைகள் வலை பின்னாத வகையும் உள்ளது. பூச்சி இனத்தை சேராத சிலந்திகள் பூச்சிகளை விழுங்கும் இனமாகும் அடுத்து தன் இனத்தை தானே விழுங்கும் இனமுமாகும். நமக்கு நண்பனாகும்.

பெரும்பாலும் தோட்டங்களில் இருக்கும் பூச்சிகளை இனம் கண்டு அதற்கேற்ப நன்மை செய்யும் பூச்சியா, தீமை செய்யும் பூச்சியா என்பதை தீர்மானித்து பூச்சிவிரட்டியை தேவைக்கேற்பவும் பயன்படுத்தி பூச்சிகளை நமது கட்டுக்குள் வைத்து செழிப்பான ஆரோக்கிய உணவை பெறலாம்.

(1 vote)