பெருங்கூம்பாலை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பெருங்கூம்பாலை அரிசி என்ற ரகம் கூம்பாலை என்ற நெல் ராகத்தின் உட்பிரிவு. தமிழகத்தின் பாரம்பரிய அரிசி ராகத்தில் ஒன்று இந்த பெருங்கூம்பாலை அரிசி. சில மாவட்டங்களில் இந்த ரகம் சிறிது மாற்றத்துடன் விளையக் கூடியது. ஆறுமாதம் விளையக்கூடிய இந்த அரிசியும் பெருங்கூம்பாலையின் அனைத்து மருத்துவகுணத்தையும் கொண்டது.

இந்த பெருங்கூம்பாலை அரிசி சிகப்பு நிறத்தில் சற்று பெரிதாக இருக்க சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும். சாப்பாட்டை விட இந்த அரிசியில் செய்யப்படும் கருவேப்பிலை பழைய சாதத்தின் சுவை அபாரமாக இருக்கும்.

இந்த பெரிய அரிசியை வடித்து அதனில் ஒரு சிறிது கருவேப்பிலையை சேர்த்து சிறிது தண்ணீருடன் ஊறவைக்க வைக்கவேண்டும். மறுநாள் இந்த கருவேப்பிலை பழைய சாதம் நெய் மணம் கமழும் மோர் கலந்து பருக நீராகாரம் பிரமாதமாக இருக்கும்.