வேலிபருத்தி / உத்தாமணி – மூலிகை அறிவோம்

Pergularia daemia; வேலிபருத்தி; உத்தாமணி

வேலிபருத்தி என்ற உத்தாமணி உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. தலையில் ஏற்படும் வழுக்கைக்கு மருந்தாகவும் உள்ளது. இந்த வேலிபருத்தி இலையை எண்ணையில் காய்ச்சி வழுக்கை உள்ள பகுதிகளில் தொடர்ந்து பயன்படுத்த மீண்டும் முடிவளர தொடங்கும். ஐந்து மிளகை ஐம்பது மிள்லி உத்தமணி சாற்றில் மூன்று நாட்கள் சூரிய ஒளியில் புடம் போட்டு எடுத்து ஒரு நாளைக்கு ஒரு மிளகு என்ற விகிதத்தில் மூன்று நாட்கள் உட்கொள்ள குழந்தைகளுக்கு ஏற்படும் வரட்டு இருமல் சரியாகிவிடும் சளி குணமாகும்.

வேலிப்பருத்தி இலைச்சாறுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாதவலி, வீக்கம் குணமாகும். தொடக்க நிலையில் இருக்கும் யானைக்கால் நோய் இருந்தால் 48 நாட்களில் குணமாகும்.

5 கிராம் அலவு வேலிப்பருத்தி வேரை பாலில் அரைத்து கலக்கி காலையில் 3 நாட்களுக்கு கொடுக்க கரப்பான், கிரந்தி, சூலை, பிடிப்பு, வாயு முதலியவை போகும்.

இது ஒரு படுவர்ம மூலிகை;எந்த வகையிலும் வர்ம காயங்களை கொண்டவர்கள் கொண்டவுடன் இதன் இலைச்சாறு ஒரு 50 மில்லி எடுத்து அருந்தி அடிபட்ட இடத்தில் அரைத்து பற்றிடுவது நல்லது.