வயிற்றுப்புண், வாய்ப் புண், நெஞ்செரிச்சல் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த குழம்பு. இந்த மிளகு குழம்பு வயிற்றுவலி, எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது.
உடலில் ஏற்படும் பலவிதமான எரிச்சலுக்கும், வயிற்றில் வரக்கூடிய தொந்தரவுகள், அல்சர் மாதிரியான பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்து இந்த மிளகு குழம்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட உடலில் ஏற்படும் காயங்கள் வீக்கங்கள் மறையும்.
தேவையான பொருட்கள்
- 50 கிராம் மிளகு
- சிறிது புளி (ஒரு கோலிகுண்டு அளவு)
- சிறிது கருவேப்பிலை
- 2 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/2 சிறுதுண்டு பெருங்காயம்
- 2 – 4 மிளகாய் வற்றல்
- 50 கிராம் உளுத்தம்பருப்பு
- உப்பு
- 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
செய்முறை
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்க்கவும்.
- நல்லெண்ணெய் சூடானதும் பெருங்காயம், உளுத்தம்பருப்பு, மிளகு சேர்க்கவும்.
- உளுத்தம்பருப்பு வறுபட்ட பின், மிளகு வெடிக்கத் தொடங்கியதும் புளியை அதில் சேர்க்க வேண்டும்.
- புளியை நன்கு சுட்ட பின் அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும்.
- இவற்றை வதக்கியப்பின் ஆறவிடவும்.
- சற்று ஆறியபின் அனைத்தையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
- பின் ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணை ஊற்றி சீரகத்தூள், கருவேப்பிலை சேர்த்து வறுத்து அரைத்தவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீருடன் உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
- நன்கு கொதிக்க தொடங்கியபின் அடுப்பை சிறுதீயில் வைத்து இறுகி வரும் சமயம் அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும்.
- நல்ல சுவையான சத்தான மிளகு குழம்பு தயார்.
மிளகு குழம்பு
வயிற்றுப்புண், வாய்ப் புண், நெஞ்செரிச்சல் என பல தொந்தரவுகளுக்கு சிறந்த குழம்பு. இந்த மிளகு குழம்பு வயிற்றுவலி, எரிச்சல் போன்ற தொந்தரவுகளுக்கும் சிறந்தது. உடலில் ஏற்படும் பலவிதமான எரிச்சலுக்கும், வயிற்றில் வரக்கூடிய தொந்தரவுகள், அல்சர் மாதிரியான பிரச்சனைகளுக்கும் சிறந்த ஒரு மருந்து இந்த மிளகு குழம்பு. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. வாரம் ஒருமுறை இந்த குழம்பு வைத்து சாப்பிட உடலில் ஏற்படும் காயங்கள் வீக்கங்கள் மறையும்.

👍