பேய் சுரையை எங்கும் காணமுடியாது. காட்டுப்பகுதிகளில் எங்காவது ஒரு மரக் கொடிகளில் ஏறி படர்ந்திருக்கும். அதனால் இதனை காட்டுச் சுரை என்று அழைப்பதுண்டு. இதற்கு நீர்க்குமிழ் சுரை என்ற பெயரும் உள்ளது. பேய்ச்சுரை விஷத்தை முறிக்கும் சக்தி பெற்றதாக இருக்கிறது. விஷத்தை முறிக்கும் மூலிகை காயாக இந்த பேய் சுரை உள்ளது. கசப்பாக இருக்கும் இதனை சிறிதளவு உட்கொண்டாலே போதும் கொடிய நச்சையும் முறிக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த மூலிகையாக உள்ளது.
பேய் சுரையின் இலை, காய், கொடி விதை என அனைத்தும் பயன்படக்கூடியது. மூல நோய்க்கும் இது மருந்தாக பயன்படுவதுண்டு. அழகு பொருட்களை தயாரிக்கவும் இதனுடைய குடுவை பயன்படுகிறது.
பாம்பு கடி விஷம் முறிய
பாம்பு கடித்து விட்டதென்றால் உடனே பேய்ச்சுரையின் வேரை மைபோல் அரைத்து கொட்டைப் பாக்கு அளவு விழுதை உள்ளுக்குக் கொடுத்து விட்டால் உடனே விஷம் முறியும். வேறு எந்த விஷக்கடியாக இருந்தாலும் இதனை அதற்கு கொடுக்கலாம். கொடிய பாம்பு கடிகளையும், உடனடியாக இரத்தத்தில் கலக்கும் விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்டது இந்த பேய்ச் சுரை.