இரத்த சோகை, உடல் பருமன், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவாற்றிற்கு சிறந்த ஒரு காய் இந்த பீர்க்கங்காய். குழந்தைகளுக்கு தேவையான் வைட்டமின் சத்துக்கள் அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த துவையல்.
பொதுவாக பீர்க்கங்காயின் சதைப்பகுதியை கூட்டு, குழம்பு என பல உணவுகளை செய்து சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை பலரும் வீணாக்குவதுண்டு. அவ்வாறு வீணாக்காமல் அதனைக் கொண்டு ஒரு சத்தான சுவையான துவையல் செய்து உண்ணலாம். இட்லி, தோசை, சாதத்துடனும் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
- ஒரு கைப்பிடி பீர்கங்காய் தோல்
- 2 வர மிளகாய்
- சிறிதளவு உளுத்தம்பருப்பு
- சிறிதளவு கடுகு
- சிறிதளவு சீரகம்
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 2 சின்ன வெங்காயம்
- 2 பல் பூண்டு
- சிறு கொட்டை பாக்கு அளவு புளி
- நல்லெண்ணெய்
செய்முறை
- ஒரு மண் சட்டியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, வர மிளகாய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
- இதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி, சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காய் தோலை சேர்த்து வதக்கவும்.
- இவற்றுடன் சிறிது புளியும் சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
- சற்று ஆறியதும் இவற்றுடன் பூண்டு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
- சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் தயார்.
பீர்க்கங்காய் துவையல்
இரத்த சோகை, உடல் பருமன், மலச்சிக்கல், கல்லீரல் நோய் போன்றவாற்றிற்கு சிறந்த ஒரு காய் இந்த பீர்க்கங்காய். குழந்தைகளுக்கு தேவையான் வைட்டமின் சத்துக்கள் அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்த துவையல். பொதுவாக பீர்க்கங்காயின் சதைப்பகுதியை கூட்டு, குழம்பு என பல உணவுகளை செய்து சத்துக்கள் நிறைந்த தோல் பகுதியை பலரும் வீணாக்குவதுண்டு. அவ்வாறு வீணாக்காமல் அதனைக் கொண்டு ஒரு சத்தான சுவையான துவையல் செய்து உண்ணலாம். இட்லி, தோசை, சாதத்துடனும் சேர்த்து உண்ண சுவையாக இருக்கும்.

நன்று