கம்பு கொழுக்கட்டை

உடலுக்கு தெம்பையும், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அளிக்கும் அற்புத உணவு இந்த கம்பு. மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற சிறந்த உணவு. சத்துக்கள் அதிகம் நிறைந்த சிறுதானியம்.உடல் உஷ்ணத்தை தணிக்கும். தாது சத்துக்கள் நிறைந்தது.

குழந்தைகள், பெரியார்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் விரும்பி உண்ணக்கூடியது. மேலும் நாட்டுக் கம்பைப் பற்றியும் அதன் பயன்கள், நன்மைகளை தெரிந்துக் கொள்ள இங்கு இணையவும். இந்த பகுதியில் நாட்டுக் கம்பில் தயாரிக்கக் கூடிய உணவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  • 4 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • 2 சிறிதாக நறுக்கிய வரமிளகாய்

  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது கொத்தமல்லி
  • 2 ஸ்பூன் தேங்காய்த் துருவல்
  • உப்பு

தாளிக்க

  • 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து

செய்முறை

  • கம்பை 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • மிக்ஸியில் ஊறிய கம்பை கரகரப்பாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து தாளித்து அதனுடன் வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி உப்பு சேர்க்க வேண்டும்.

  • இவற்றுடன் அரைத்த மாவை சேர்த்து சிறுதீயில் கிளறவும்.
  • மாவு கெட்டியானதும் அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
  • சற்று கைப்பொறுக்கும்சூட்டில் ஆறியதும் கொழுக்கட்டைகளாக உருட்டி ஆவியில் 10 நிமிடம் வேகவைக்கவும்.
  • சுவையான சத்தான கம்பு கொழுக்கட்டை தயார்.
  • கார சட்னி, தக்காளி சட்னி, எள் சட்னியுடன் சுவையாக இருக்கும்.

கம்பு கொழுக்கட்டை

மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற சிறந்த உணவு. சத்துக்கள் அதிகம் நிறைந்த சிறுதானியம்.உடல் உஷ்ணத்தை தணிக்கும். தாது சத்துக்கள் நிறைந்தது.