கம்பு கஞ்சி / Kambu Kanji

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. கோடைகாலத்திற்கு சிறந்த உணவாக இந்த கம்பு கஞ்சி இருக்கும். எளிதில் செரிமானமாகும் கஞ்சியாகவும் இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு குருணை
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • ½ மூடி தேங்காய்
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • சிறிது மஞ்சள் தூள்

  • தேவைக்கேற்ப பசு நெய்
  • சிறிது மல்லித் தூள்
  • 5 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • உப்பு

செய்முறை

  • குருணையாக உடைத்த கம்பையும் பாசிப்பருப்பையும் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • ஒரு கொதிவந்தவுடன் சிறிதாக நறுக்கிய சின்னவெங்காயம், தட்டி எடுத்த பூண்டையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.

  • நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்து அதனுடன் சீரகம் தேங்காயை அரைத்து சேர்க்கவும்.
  • கடைசியாக சிறிது சின்ன வெங்காயத்தை நெய்யில் வறுத்து சேர்க்க நல்ல சத்தான சுவையான உணவாகவும் இருக்கும்.
5 from 1 vote

கம்பு கஞ்சி

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. கோடைகாலத்திற்கு சிறந்த உணவாக இந்த கம்பு கஞ்சி இருக்கும். எளிதில் செரிமானமாகும் கஞ்சியாகவும் இது இருக்கும்.
Breakfast
Indian
Pearl Millet Health Drink, Porridge Recipe,
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 25 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு குருணை
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • ½ மூடி தேங்காய்
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • சிறிது மஞ்சள் தூள்
  • தேவைக்கேற்ப பசு நெய்
  • சிறிது மல்லித் தூள்
  • 5 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • உப்பு

செய்முறை

  • குருணையாக உடைத்த கம்பையும் பாசிப்பருப்பையும் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • ஒரு கொதிவந்தவுடன் சிறிதாக நறுக்கிய சின்னவெங்காயம், தட்டி எடுத்த பூண்டையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்து அதனுடன் சீரகம் தேங்காயை அரைத்து சேர்க்கவும்.
  • கடைசியாக சிறிது சின்ன வெங்காயத்தை நெய்யில் வறுத்து சேர்க்க நல்ல சத்தான சுவையான உணவாகவும் இருக்கும்.

2 thoughts on “கம்பு கஞ்சி / Kambu Kanji

  1. Maria

    5 stars
    Healthy Breakfast, thnk u

Comments are closed.