கம்பு கஞ்சி / Kambu Kanji

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் சிறந்த சிறுதானியம் நம் நாட்டுக் கம்பு. கோடை காலத்திற்கு சிறந்த உணவாக இந்த கம்பு கஞ்சி இருக்கும். எளிதில் செரிமானமாகும் கஞ்சியாகவும் இது இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு குருணை
  • ¼ கப் பாசிப்பருப்பு
  • ½ மூடி தேங்காய்
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • சிறிது மஞ்சள் தூள்

  • தேவைக்கேற்ப பசு நெய்
  • சிறிது மல்லித் தூள்
  • 5 சின்ன வெங்காயம்
  • 4 பல் பூண்டு
  • உப்பு

செய்முறை

  • குருணையாக உடைத்த கம்பையும் பாசிப்பருப்பையும் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.
  • ஒரு கொதிவந்தவுடன் சிறிதாக நறுக்கிய சின்னவெங்காயம், தட்டி எடுத்த பூண்டையும் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு வேகவிடவும்.

  • நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து உப்பு சேர்த்து அதனுடன் சீரகம் தேங்காயை அரைத்து சேர்க்கவும்.
  • கடைசியாக சிறிது சின்ன வெங்காயத்தை நெய்யில் வறுத்து சேர்க்க நல்ல சத்தான சுவையான உணவாகவும் இருக்கும்.

2 thoughts on “கம்பு கஞ்சி / Kambu Kanji

  1. Maria

    5 stars
    Healthy Breakfast, thnk u

Comments are closed.