கம்பு குழிப்பணியாரம்

கம்பில் புரோட்டின் சத்து உள்ளது. தானிய வகைகளில் (அரிசி, கோதுமையும் சேர்த்து) வைட்டமின் ‘A’ மற்றும் folic acid அதிகம் உள்ளது கம்பில் தான். கம்பில் இரும்பு சத்தும், பீட்டா கரோட்டீன் சத்தும் அதிகம் உள்ளது. இது நம் உடம்பு பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ சத்தாக மாற்றும். எனவே பீட்டா கரோட்டீனை, வைட்டமின் ‘A’ க்கான ஆதாரம் எனலாம். நம் தோல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், கூர்மையான பார்வைக்கும் வைட்டமின் ‘A’ அவசியம். நார்ச் சத்து, வைட்டமின் ‘B’, வைட்டமின் ‘E’, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்தும் கம்பில் அதிகம். கொழுப்பைக் கரைக்கக் கூடியது.

Nattu Kambu, kambu upma recipe in tamil, pearl millet recipe, nattu kambu upma, upma recipe in tamil, kambu recipe, millet recipe in tamil

பொதுவாக கம்பு என்றவுடன் அனைவரின் நினைவிலும்  வருவது கம்பங் களியும் கம்பங் கூழும் தான்.  அவை மட்டும் தானா,  இந்த நாட்டுக் கம்பில் விதவிதமான சுவையான பல பாரம்பரிய மற்றும் நவீன உணவுகளையும் தயாரிக்கலாம். கம்பு இட்லி, கம்பு தோசை, கம்பு அடை, கம்பு உப்புமா, கம்பு புட்டு, கம்பு வடை, கம்பு சட்னி என்று பல பல கார வகைகளில் தொடங்கி கம்பு சாதம், கம்பு பிஸிபேளாபாத், கம்பு தயிர் சாதம், கம்பு பிரியாணி என கம்பில் செய்யும் உணவுகளை பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் நாம் கம்பை வைத்து எவ்வாறு எளிமையான கம்பு குழிப்பணியாரம் செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • ¼ கப் உளுந்து
  • உப்பு

கார குழிப்பணியாரம் தயாரிக்க

  • ¼ ஸ்பூன் கடுகு 
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • 1௦ பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கறிவேப்பிலை
  • சிறிது பச்சை மிளகாய் / வர மிளகாய் / மிளகு

இனிப்பு குழிப்பணியாரமாக தயாரிக்க

  • தேவைக்கேற்ப வெல்லம்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

சன்னமாக இருக்கும் நாட்டுக் காம்பை 4 மணி நேரமும், உளுந்தை அரை மணி நேரமும் ஊறவைத்து முதல் நாள் இரவே ஆட்டி புளிக்க வைக்கவும். 

நன்கு புளித்து தயாராக இருக்கும் இந்த மாவினைக் கொண்டு மறுநாள் இனிப்பு அல்லது கார குழிப்பணியாரங்களைத் தயாரிக்கலாம்.

தேவையான மாவினை இனிப்பு காரத்திற்கு என இரண்டாக பிரித்து தனியாக எடுத்துக் கொள்ளலாம்.

கார குழிப்பணியாரம் தயாரிக்க சிறிது கடுகு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் / வர மிளகாய் / மிளகு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். குழந்தைகளுக்கு பச்சைமிளகாய் / வரமிளகாய் சேர்க்க வேண்டாம். அதற்கு பதில் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.

பின் தாளித்து சேர்த்த இந்த மாவினை குழிப்பணியார சட்டியில் செக்கிலாட்டிய நல்லெண்ணையுடன் ஊற்றி சுட்டு எடுக்கவும்.

இனிப்பு குழிப்பணியாரமாக தயாரிக்க இயற்கை வெல்லம், ஏலக்காய் தூளினை மாவுடன் சேர்த்து இனிப்பு பணியாரங்களாகவும் செய்யலாம். 

பள்ளிக்கு எடுத்துச் செல்லவும், மாலை வேலை உண்ணவும் சிறந்தது இந்த கம்பு பணியாரம். பல சத்துக்களைக் கொண்டது நாட்டுக் கம்பு. 

கம்பு குழிப்பணியாரம்

பள்ளிக்கு எடுத்துச்செல்லவும், மாலை வேலை உண்ணவும் சிறந்தது இந்த கம்பு பணியாரம். பல சத்துக்களைக் கொண்டது நாட்டுக் கம்பு. 
ஆயத்த நேரம் : – 10 hours
சமைக்கும் நேரம் : – 20 minutes
மொத்த நேரம் : – 10 hours 20 minutes
பரிமாறும் அளவு : – 4

தேவையான பொருட்கள்

  • 1 கப் நாட்டுக் கம்பு
  • ¼ கப் உளுந்து
  • உப்பு

கார குழிப்பணியாரம் தயரிக்க

  • ¼ ஸ்பூன் கடுகு 
  • ¼ ஸ்பூன் சீரகம்
  • 1௦ பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்
  • சிறிது கொத்தமல்லி
  • சிறிது கருவேப்பில்லை
  • சிறிது பச்சைமிளகாய் / வர மிளகாய் / மிளகு

இனிப்பு குழிபணியாரமாக தயாரிக்க

  • தேவைக்கேற்ப வெல்லம்
  • ஒரு சிட்டிகை ஏலக்காய் தூள்

செய்முறை

  • சன்னமாக இருக்கும் நாட்டுக் காம்பை 4 மணிநேரமும், உளுந்தை அரைமணி நேரமும் ஊறவைத்து முதல் நாள் இரவே ஆட்டி புளிக்க வைக்கவும். 
  • நன்கு புளித்து தயாராக இருக்கும் இந்த மாவினைக் கொண்டு மறுநாள் இனிப்பு அல்லது கார குழிபணியாரங்களைத் தயாரிக்கலாம்.
  • தேவையான மாவினை இனிப்பு காரத்திற்கு என இரண்டாக பிரித்து தனியாக எடுத்துக்கொள்ளலாம்.
  • கார குழிப்பணியாரம் தயரிக்க சிறிது கடுகு சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி, கறிவெப்பிலை, பச்சைமிளகாய் / வர மிளகாய் / மிளகு சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். குழந்தைகளும் உண்ணவிருக்கும் இதனில் பச்சைமிளகாய் / வரமிளகாய் சேர்க்க வேண்டாம். அதற்கு பதில் மிளகு சேர்த்துக்கொள்ளலாம்.
  • பின் தாளித்து சேர்த்த இந்த மாவினை குழிப்பணியார சட்டியில் செக்கிலாட்டிய நல்லெண்ணையுடன் ஊற்றி சுட்டு எடுக்கவும்.
  • இனிப்பு குழிபணியாரமாக தயாரிக்க இயற்கை வெல்லம், ஏலக்காய் தூளினை மாவுடன் சேர்த்து இனிப்பு பணியாரங்களாகவும் செய்யலாம். 
  • பள்ளிக்கு எடுத்துச்செல்லவும், மாலை வேலை உண்ணவும் சிறந்தது இந்த கம்பு பணியாரம். பல சத்துக்களைக் கொண்டது நாட்டுக் கம்பு.