பழைய சாதம் / நீராகாரம்

பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என பெயர்கள் கொண்டது இந்த பழைய சாதம். வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. 

இந்த நீரகரத்தை இரசாயனங்கள் இன்றி விளைந்த ஏதேனும் ஒரு பாரம்பரிய அரிசியில் தயாரித்து உண்ண பலன் கிடைக்கும். அதிலும் பாரம்பரிய சிகப்பரிசியில் தயாரித்து உண்ண அந்த உணவு தேவாமிர்த மாகும்.

தேவையான பொருட்கள்

  • கிச்சிலி சம்பா அரிசி
  • பசு மோர்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • சின்ன வெங்காயம்
  • பெருங்காயம்
  • மாங்காய்
  • கொத்தமல்லி

செய்முறை

  • காலையில் உணவாக பழையது பருகுவதற்கு முதல் நாள் இரவே கிச்சிலி சம்பா அரிசியை (கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை) இந்த பதிவில் இருப்பதைப்போல் வடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் வடிக்கும் சாதத்துடன் சேர்த்தும் மறுநாளைக்கு தேவைப்படும் அரிசியை வடித்து எடுத்து வைத்துகொள்ளலாம்.

  • முதல் நாள் இரவு இந்த சாதத்தை ஒரு மண்பானையில் சிறிது கருவேப்பிலை சேர்த்து சாதம் மூழ்குமளவிற்கு நீரூற்றி வைக்கவேண்டும்.
  • மறுநாள் காலையில் அதனை எடுத்து நன்கு கைகளால் கரைக்கவேண்டும்.
  • நன்கு கரைத்த பின் அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம், மோர் செர்க்க்து நன்கு கலந்துவிடவேண்டும். (தயிராக இருந்தால் முதலில் அதனை நன்கு கடைந்து மோராக தயாரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.)

  • இந்த கரைசலில் கொத்தமல்லி தூவி தேவையான அளவு சின்ன வெங்காயம், மாங்காய் சேர்த்து பருகலாம்.
  • காலை உணவாக இதனை பருகுவதால் உடல் உஷ்ணம் குறையும், உடலில் இருக்கும் நோய்கள் அகலும், உடல் பலப்படும்.மண்சட்டியில் இந்த சாதத்தை வைத்து புளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பல பல நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகும். குடலை பலப்படுத்தும்.

பழைய சாதம் / நீராகாரம்



பழங்கஞ்சி, பழஞ்சி, பழஞ்சாதம், பழைது, பழைதூண், நீராகாரம் என பெயர்கள் கொண்டது இந்த பழைய சாதம். வைட்டமின் B6, B12 போன்றவை இந்த பழைய சாதத்தில் அதிகம் உருவாகிறது. புரதம் மற்றும் மாவுச் சத்து எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. 


⏲️ ஆயத்த நேரம்
8 hrs

⏲️ சமைக்கும் நேரம்
20 mins

🍴 பரிமாறும் அளவு
2

🍲 உணவு
காலை


தேவையான பொருட்கள்
  • கிச்சிலி சம்பா அரிசி
  • பசு மோர்
  • உப்பு
  • கருவேப்பிலை
  • சின்ன வெங்காயம்
  • பெருங்காயம்
  • மாங்காய்
  • கொத்தமல்லி
செய்முறை
  1. காலையில் உணவாக பழையது பருகுவதற்கு முதல் நாள் இரவே கிச்சிலி சம்பா அரிசியை (கிச்சிலி சம்பா அரிசி சாதம் சமைக்கும் முறை) இந்த பதிவில் இருப்பதைப்போல் வடித்து எடுத்துக் கொள்ளவேண்டும். முதல் நாள் வடிக்கும் சாதத்துடன் சேர்த்தும் மறுநாளைக்கு தேவைப்படும் அரிசியை வடித்து எடுத்து வைத்துகொள்ளலாம்.
  2. முதல் நாள் இரவு இந்த சாதத்தை ஒரு மண்பானையில் சிறிது கருவேப்பிலை சேர்த்து சாதம் மூழ்குமளவிற்கு நீரூற்றி வைக்கவேண்டும்.
  3. மறுநாள் காலையில் அதனை எடுத்து நன்கு கைகளால் கரைக்கவேண்டும்.
  4. நன்கு கரைத்த பின் அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம், மோர் செர்க்க்து நன்கு கலந்துவிடவேண்டும். (தயிராக இருந்தால் முதலில் அதனை நன்கு கடைந்து மோராக தயாரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.)
  5. இந்த கரைசலில் கொத்தமல்லி தூவி தேவையான அளவு சின்ன வெங்காயம், மாங்காய் சேர்த்து பருகலாம்.
  6. காலை உணவாக இதனை பருகுவதால் உடல் உஷ்ணம் குறையும், உடலில் இருக்கும் நோய்கள் அகலும், உடல் பலப்படும்.மண்சட்டியில் இந்த சாதத்தை வைத்து புளிக்க வைப்பதால் உடலுக்கு தேவையான பல பல நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகும். குடலை பலப்படுத்தும்.