இலவங்கப்பட்டை பயன்கள் மருத்துவம்
Cinnamomum verum; Cinnamom; இலவங்கப்பட்டை
சாதாரண சமையல் தொடங்கி விருந்து வரை இடம்பெறும் பல உணவுகளில் இடம் பிடிக்கும் ஒரு மசாலாப் பொருள் இலவங்கப்பட்டை. இதில் பல வகை உள்ளது அவற்றில் சுருள் பட்டை (Ceylon Cinnamom) என்பதே மருத்துவகுணமும் சத்துக்களும் நிறைந்தது. அதிக உயிர்ச்சத்துள்ள பொருட்களில் ஒன்று இந்த பட்டை. கேன்சர் செல் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றல் நிறைந்தது என சமீபத்திய ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது.
இது ஒரு மரப் பட்டை. பெரும்பாலும் இந்த மரங்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் உரிய மரம். இந்த மரங்களை காய்ந்த தண்டின் பட்டைப் பகுதிக்காகவே பயிரிடப்படுகிறது. காரமும் இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது இந்த பட்டை. இதுவே மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. இதில் நறுமண எண்ணெய் சத்துகளும் உள்ளது.


காமம் பெருக்கும் ஆற்றல் கொண்ட பட்டை உடலில் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும். விஷக்கடியின் நஞ்சைப் போக்கும். உடலில் ஏற்படும் பல நாள்பட்ட நோய்களை தீர்க்கும் ஆற்றலும் நிறைந்தது. மருந்தாக இதனை மற்ற மூலிகைகளுடன் சேர்த்து தயாரித்துப் பயன்படுத்துவது அல்லது சுருள் பட்டையை மட்டுமே நீரில் கொதிக்கவைத்து ஒரு தேநீராக பருகுவது சிறந்த பலனை அளிக்கும்.
பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள், மிளகு ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொண்டு அன்றாடம் பசும் பாலில் சிறிதளவு சேர்த்து காய்ச்சி இரவு பருகிவர உடல் பலப்படும், நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.
இலவங்கப்பட்டை, சுக்கு, ஏலரிசி ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து சிறிதளவு சேர்த்து ஒரு கப் நீரில் காய்ச்சி தினமும் இரண்டு வேளைகள் எடுத்து வர வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, வயிற்றுக் கழிச்சல், வாந்தி மறையும்.
இரவு சிரிதவு நீரில் இலவங்கப்பட்டையை ஊறவைத்து அந்த ஊறல் குடிநீரை தினமும் காலையில் கால் கப் அளவு பருகிவர இதயம் பலப்படுத்தும். மேலும் பல்வலி, வாதவலிகள், வயிற்று வலி மறையும்.
கிராம்பு, சோம்பு, வாய்விடங்கம், சுக்கு மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை சம பங்கு சேர்த்து பொடித்து வைத்துக் கொண்டு கால் ஸ்பூன் அளவு குடிநீரிட்டு சுண்டக் காய்ச்சி வேளைக்கு இரண்டு ஸ்பூன் விதம் எடுத்து வர பூச்சிக்கடி, வயிற்று வலி, உடல் வலி நீங்கும்.
கையால் பிடிக்கப் பொய்யாய் போச்சுது.
சமீபத்திய கருத்துகள்