Welcome to HealthnOrganicsTamil !!!

பாதஹஸ்தாசனம் / Hand to Foot Pose

பாதஹஸ்தாசனம் என்பது யோகாசனத்தில் கால் மற்றும் கை தொடர்புடைய ஆசனம். பாதம் என்பது கால், ஹஸ்தம் என்றால் கை. அதாவது கையைக் கொண்டு காலைத் தொடும் ஆசனம்.

இந்த பாதஹஸ்தாசனத்தில் கைகள் காலுக்கு நிகராக பூமியைத் தொடுவது போல் ஆசனம் அமையும். உடல் பருமனை குறைக்க மிக சிறந்த ஆசனம். மூலம், மலச்சிக்கலை நீக்கும் சிறந்த ஆசனம். இந்த ஆசனத்தை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் செய்யலாம்.

பாதஹஸ்தாசனம் செய்முறை

தரை விரிப்பில் இரண்டு கால்களையும் ஒன்றாக இணைத்து உடலை நேராக வைத்துக் கொண்டு நின்றுக் கொள்ள வேண்டும். கைகளை தலைக்கு மேல் தூக்கி சிறிது முன்னோக்கி முழங்கால் மடங்காமல் குனிந்து தரையை இரு கைகளாலும் தொட வேண்டும். இரண்டு கைகளுக்கும் இடையில் தலையை கீழ்நோக்கி இயல்பாக வைக்கவேண்டும்.

pathahasthasanam YOGA in tamil, Hand to Foot Pose benefits uses

வயிற்றுப் பகுதியை பலப்படுத்தும்

இந்த யோக ஆசனத்தால் வயிற்றுப் பகுதியும், வயிற்றுக்குக் கீழ் இருக்கும் பகுதியும் சீராக இயங்கும். கருப்பை, விந்துப் பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் போன்றவை பலப்படும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்வதால் சீரான செரிமானத்தைப் பெற முடியும், அஜீரணம் நீங்கும், சுரப்பிகள் சீராக சுரக்கும்.

மூல நோய்க்கு

மூல நோய் உள்ளவர்கள் அவசியம் செய்ய வேண்டுய சிறந்த ஆசனம். இதனை தொடர்ந்து செய்வதால் இறுகிய மலம் சுலபமாக வெளியேறவும், மூலத்தால் வந்த பாதிப்புகள் நீங்கவும் உதவும்.

பெண்களுக்கு

தொடர்ந்து இந்த ஆசனத்தை செய்வதால் மாதவிடாயில் வரும் கோளாறுகள் நீங்கும். உடல் பருமனைக் குறைக்கும். மலட்டுத் தன்மையை போக்கவும், குழந்தைப்பேறு பெறவும் உதவும் ஆசனம். கருப்பையை பலப்படுத்த உதவும் இந்த ஆசனம் பெண்களின் ஜனன உறுப்பு சீராக இயங்க வழிவகை செய்யும்.

ஆண்களுக்கு

விந்தணு குறைபாடு அகல உதவும் ஆசனம். இதனால் சீரான இரத்த ஓட்டம் பிறப்புறுப்பிற்கு கிடைக்கும். நரம்புகள் வலுபெறும், மலட்டுத் தன்மை நீங்கும். மலட்டுத் தன்மையை போக்கவும், குழந்தைப்பேறு பெறவும் உதவும் ஆசனம்.

உடல் பருமன் குறைய

உடல் பருமன் குறைய மிக சிறந்த எளிய ஆசனம். குறிப்பாக வயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான சதையை நீக்கி தொந்தி விழாமல் பாதுகாக்கும். தொடர்ந்து செய்வதால் உடல் வலிமை அதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்க

பெருங்குடலை பலப்படுத்துவதுடன் மலச்சிக்கல் தொந்தரவை முற்றிலும் நீக்குகிறது இந்த பாதஹஸ்தாசனம். பெருங்குடலுக்கு தேவையான ஆற்றலையும், கழிவுகளை வெளியேற்றும் தன்மையும் இந்த ஆசனத்திற்கு உண்டு.

5/5 - (1 vote)
சிந்தனை துளிகள் :

சாளக்கிராமம் சாமியாருக்கு சோறு போடுமா?

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!