Passiflora foetida; காட்டு கொடிதோடை
காட்டு கொடிதோடை; சிறுபூனைக்காலி; சிறுபூனைக்காலி முப்பரிசவல்லி; சொக்கன் பழம்; மொசகொட்டான்; பூனைப்பிடுக்கு; டொப்பி பழம் என பல பெயர்களைக் கொண்ட மூலிகை கொடி. தமிழ்நாட்டில் பரவலாக வளரக்கூடிய கொடி. பழங்கள் சிகப்பு நிறத்தில் இருக்கக்கூடியது. சுவையான பழங்கள். தளிர் இலைகளை உணவாக பயன்படுத்தலாம். தூக்கமின்மை, சளி, இருமல் மாதிரியான தொந்தரவுகளுக்கு சிறந்தது.
இந்த சொக்கன் கொடி வெளிநாட்டைப் பூர்வீகமாக கொண்ட மூலிகை என்று கூறுகின்றனர். இதைப்பற்றி சாஸ்திரீக ரீதியான பெயரே சொக்கன் பழம் ஆகும். இதன் இலை மற்றும் காய்களை கசாயம் வைத்து அருந்திவர அஜீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, வாயு பிரச்சனைகள் மற்றும் ஆஸ்துமா முதலியவைகள் சரியாகும். இதன் சமூலத்தை கசாயம் வைத்து அருந்திவர நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். இதன் இலையை சூப் வைத்து அருந்திவர கர்ப்பை வாய் புற்றுநோய் சரியாகும் என்று கூறுகின்றனர்.
இதன் இலை மற்றும் வேரை கசாயமாக செய்து அருந்திவர வலிப்பு மற்றும் மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சரியாகும். பழத்தை உண்பதால் எலும்புகள் உறுதியாகும், இரத்த சோகை வராமல் தடுக்கும், புற்றுநோய் வராமல் உடலை பாதுகாக்கும், இரத்த அழுத்தத்தை சரி செய்யும், ஈறு மற்றும் பற்களுக்கு பலத்தை அளிக்கும், சிறுநீரக பிரச்சனைகளை சரி செய்யும்.
இந்த பூக்களை நிழல் காய்ச்சலாக உலர்த்தி வைத்துக் கொண்டு தேநீராக தயார் செய்து அருந்திவர குடல்புண்களை குணப்படுத்தும், பதட்டத்தை போக்கும், தசைபிடிப்பு, வலிப்பு, சுவாசக்கோளாறு போன்றவற்றை சரிசெய்கிறது. உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.