Parivrtta Trikonasana benefits tamil, Revolved Triangle yoga pose, Parivrtta Trikonasana

பரிவர்த்தன திரிகோணாசனம் / Revolved Triangle

முக்கோணங்களில் நமது உடலை நிறுத்தி செய்யக்கூடிய ஆசனம் திரிகோணாசனம். இதனையே சிறிது மாறுதலுடன் செய்யும் சிறந்த ஆசனம் பரிவர்த்தன திரிகோணாசனம். கைகளுடன் இணையும் கால்களின் மாற்றத்தில் செய்யக்கூடிய ஆசனம் இது. அதாவது இடது கையை இடது காலின் பக்கம் வைக்காமல் வலது கால் பக்கம் மாற்றியும், வலது கையை இடது கால் பக்கமும் வைக்க வேண்டும்.

திரிகோணாசனத்தை விட இந்த பரிவர்த்தன திரிகோணாசனம் நமது உடலை மேலும் நன்கு முன்னும் பின்னும் வளைவை ஏற்படுத்தும். இதனால் திரிகோணாசனத்தின் பயங்களுடன் சீரான இரத்த ஓட்டம், மன அமைதியும் கிடைக்கும். மேலும் கண்களுக்கும் இந்த ஆசனம் சிறந்த பயிற்சியையும் பிரகாசத்தையும் அளிக்கும். நல்ல உடலையும் அளிக்கும். இனப்பெருக்க மண்டலத்திற்கும் நல்ல புத்துணர்வை அளிக்கும். செரிமானக் கோளாறுகளை நீக்கும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே இந்த ஆசனத்தை செய்யலாம்.

பரிவர்த்தன திரிகோணாசனம் செய்முறை

ஒரு தரைவிரிப்பில் முதலில் நேராக நின்று கால்களை இரண்டு மூன்று ஆடி தூரம் வைத்துக் கொள்ளவேண்டும். இரண்டு கைகளையும் பக்கவாட்டில் தோளுக்கு நேராக உயர்த்தவும். பின் வலது பக்க இடுப்பை பக்கவாட்டில் வளைத்து வலது கைகளால் இடது பாதத்தின் அருகில் தரையைத் தொடவேண்டும்.

இடது பக்க கை வளையாமல் மேல் நோக்கி இருக்க வேண்டும். தலை மேல் தூக்கியுள்ள இடது கையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். பத்து வினாடிகள் நிதானமாக மூச்சை உள்வாங்கி இவ்வாறு நின்று பின் நிதானமாக நேராக நிற்கவேண்டும். அதைத் தொடர்ந்து இடது பக்கமும் இடது கைகளால் வலது பக்க பாதத்தின் கால் அருகில் தரையை தொடவேண்டும். தலை தூக்கி வலது கையை பார்த்தவாறு இருக்க வேண்டும். இவ்வாறு மெதுவாக ஆரம்பத்தில் மூன்று முறை இரண்டு பக்கமும் செய்து பழக்கப்படுத்திய பின் பத்து நிமிடங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும்.

Parivrtta Trikonasana benefits tamil, Revolved Triangle yoga pose, Parivrtta Trikonasana

நரம்புகள் வலுபெறும்

கால் நரம்புகளை வலுவூட்டும் சிறந்த ஆசனம். மேலும் கைகள், முதுகுதண்டு, கழுத்து, மூளை என அனைத்து நரம்புகளுக்கும் சிறந்த வலுவை அளிக்கும். நரம்புகளை வலுவூட்டும் இந்த ஆசனம் பக்கவாதத்தை அருகிலேயே விடாது. வந்தாலும் விரைவாக மறையும்.

உடல் பருமன் குறைய

உடலில் இருக்கும் தேவையில்லாத சதை, ஊளை சதையைக் குறைக்கும். இடுப்பு, தொடை, கை, கழுத்து, வயிற்று பகுதியில் இருக்கும் அதிகமான சதையை விரைவாக கரைக்கும் சிறந்த ஆசனம்.

மலச்சிக்கல் / மூலம்

மலச்சிக்கல், மூலம் ஆகிய தொந்தரவுகளுக்கு நல்ல பலனை அளிக்கும். குடல் மற்றும் அனைத்து உறுப்புகளும் புத்துணர்வு பெரும். இரத்த ஓட்டம் சீராகும்.

சுவாச தொந்தரவுகளுக்கு

பக்கவாட்டில் கைகளை தூக்கி திரும்புவதால் நுரையீரல் தொந்தரவுகள் மறையும். சுவாசம் சம்மந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

(1 vote)