பப்பாளிக் காய் பொரியல்

உடல் பருமனுக்கு மிக சிறந்த உணவு இந்த பப்பாளிக் காய் பொரியல். பப்பாளிக் காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் கலோரிக்கள் உடலில் தேங்கியிருக்கும் கசடுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்தும். பப்பாளிக் காயின் பயன்கள், நன்மைகள் இன்னும் பல உண்டு.

தேவையான பொருட்கள்

  • 1 கப் பப்பாளிக் காய்
  • 2 வர மிளகாய்
  • ½ ஸ்பூன் கடுகு
  • ½ ஸ்பூன் உளுந்து

  • உப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • சிறிது கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • 2 ஸ்பூன் தேங்காய் துருவல்

செய்முறை

  • பச்சை நிறத்தில் இருக்கும் பப்பாளிக் காயை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதன் தோலை நீக்கி சிறிது துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பத்திரத்தில் பப்பாளிக் காய் வேகும் அளவிற்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் உப்பு சேர்த்து சதுரமாக நறுக்கி வைத்திருக்கும் பப்பாளிக் காயையும் மஞ்சளையும் சேர்த்து வேகவிடவும்.
  • வெந்ததும் பப்பாளிக் காயை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பின் ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதனில் கடுகு, உளுந்து தாளித்து அவை பொரிந்ததும் வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • பின் அதனுடன் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பப்பாளிக் காயையும் சேர்த்து வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஓரிரு நிமிடங்கள் பப்பாளிக் காய் வெந்ததும் அடுப்பை அணைத்து தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும்.

பப்பாளிக் காய் பொரியல்

உடல் பருமனுக்கு மிக சிறந்த உணவு இந்த பப்பாளிக் காய் பொரியல். பப்பாளிக் காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் கலோரிக்கள் உடலில் தேங்கியிருக்கும் கசடுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்தும்.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 15 minutes
மொத்த நேரம் : – 20 minutes

தேவையான பொருட்கள்

  • 1 கப் பப்பாளிக் காய்
  • 2 வர மிளகாய்
  • மஞ்சள் தூள் (கட்டாயமில்லை )