பண்ணைக் கீரை – நம் மூலிகை அறிவோம்

பண்ணைக் கீரை; Celosia argentea

வயக்காட்டில் தான் நிறைய பயிராகும் இந்த பண்ணைக்கீரை. இது பண்ணையில் வளரக்கூடிய கீரை என்பதால் இதற்கு பண்ணைக்கீரை என்ற பெயர் உண்டானது. இதன் இலைகள் மூன்று சென்டிமீட்டர் நீளம் ஒரு சென்டிமீட்டர் அகலமும் உள்ளதாக இருக்கும். இந்தக் கீரையானது இரண்டு வகையானது. ஒன்றுனுடைய இலை அகலமாக இருக்கும். மற்றொன்றின் இலை பெரியதாகவும், சிவப்பு நிறம் கொண்டதாகவும் இருக்கும். பெரிய இலைகளை கொண்ட கீரையே உணவிற்கு ஏற்றதாகும்.

இவ்விரண்டு வகையும் குணத்திலும் தன்மையிலும் இரண்டு ஒன்றாக இருக்கும், ஆனால் சுவையை பொறுத்தவரை அகலமான இலையைக் கொண்ட பண்ணைக் கீரையே சிறந்ததாகும். இதனுடைய இளம் தண்டும், இளம் கீரையும் உணவோடு சேர்த்துக் கொள்ளத்தக்கதாகும். பண்ணைக்கீரையினுடைய இலையை கொழுந்தாகப் பறித்து சமையல் செய்து சாப்பிடலாம்.

பண்ணைக்கீரை வேறு பெயர்கள்

மயில்கீரை, பண்ணைக்கீரை, மகிழிக்கீரை, மகிலிக்கீரை, மசிலிக்கீரை, மௌலிக் கீரை என பல பெயர்கள் இந்த கீரைக்கு உள்ளது.

பண்ணைக் கீரை சத்துக்கள்

இந்தக் கீரையில் உடலுக்கு தேவையான கொழுப்புச் சத்து, நார்ச் சத்து மாவுச் சத்துக்கள் உள்ளன.

இந்த பண்ணைக் கீரை செடி முற்றியதும் ஒவ்வொரு கிளையின் நுனியிலும் குண்டாக நீண்ட வெண்ணிறக் கதிர்கள் விடும். ஒவ்வொரு இடத்திலும் கூட்டமாக வளர்ந்து இதன் பூக்கள் புஷ்பிக்கும். இதைப் பார்க்க அந்த பகுதி ஒரே வெண்மையாகத் தோன்றும்.

பண்ணை கீரை பயன்கள்

மலமிளகும், ரத்த பேதி, குடல் நோய், சீதபேதி, மூத்திரத் தாரை நோய், பெரும்பாடு, கரப்பான், இரணம், கப இருமல், தோல் நோய், சொறி சிரங்கு போன்ற பலவிதமான நோய்களை குணமாக்குகிறது இந்த பண்ணைக் கீரை. இந்த பண்ணை கீரை இலை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.

பெரும்பாடு குணமாகும்

பெரும்பாடு குணமாக பண்ணை கீரையின் பூக்களை பறித்து வந்த 4 டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு பூக்களை சுத்தம் பார்த்து அதில் போட்டு ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் இறுத்து ஒரு டம்ளர் அளவு உள்ளுக்குக் பருக வேண்டும். அதே போல மாலையிலும் ஒரு டம்ளர் பருக வேண்டும். இந்த நீரை அடுத்த நாளும் பருகலாம். இவ்வாறு தொடர்ந்து ஏழு நாள் பருக இரத்தப்போக்கு அறவே நின்று பெரும்பாடு பூரணமாகக் குணமாகும்.

குத்திருமல் குணமாக

நன்கு வளர்ந்த பண்ணைக்கீரை கதிர்களை சேகரித்து கசக்கினால் கீரை விதை போன்ற பொடி விதைகள் கிடைக்கும். இவைகளை சேகரித்து அம்மியில் வைத்துத் தூள் செய்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு ஏழு டம்ளர் பாலில் இரண்டு தேக்கரண்டி அளவு தூளைப் போட்டு அடுப்பில் வைத்து காய்ச்சி சூடாக இருக்கும் பொழுதே பருக விடவேண்டும். காலை மாலையாக மூன்று வேளை கொடுத்தால் போதும் குத்திருமல் குணமாகும்.

வயிற்றுப்புண் ஆற

ஒரு சிலருக்கு வயிற்றில் புண் ஏற்பட்டு சாப்பிட்டவுடன் வயிற்றில் வலி உண்டாகும். இதற்கு புண் உள்ள பகுதியை அகற்றி விடுவார்கள். இதை ஆப்ரேஷன் இல்லாமலேயே சுலபமாக இந்த பண்ணைக்கீரை குணப்படுத்திவிடும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. தினசரி பண்ணைக் கீரையை சேர்த்து சமைத்து பகல் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.

இந்த பண்ணைக் கீரையை நன்கு சுத்தம் செய்து இதனோடு பருப்புச் சேர்த்து வேகவைத்து கடைந்து சாதத்துடன் சிறிதளவு நெய் விட்டு சாப்பிட்டு வர உடலுக்கு நல்லது. இந்த கீரையை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய், புளியையும் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நமது உடலை சுத்தம் செய்த குளிர்ச்சியை உடலுக்கு தருகிறது.

கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து இதனை பருப்புடன் வேக வைத்து இஞ்சி, கொத்தமல்லி, பெருங்காயம், கருவேப்பிலை இவற்றை சேர்த்து கடைந்து இதனை சாதத்தில் நெய்விட்டுக் கலந்து சாப்பிட மலக்குடல் மற்றும் ஜீரணக் குடல் ஆகியன வலிமை அடைதலோடு உடலுக்குத் தேவையான சக்தியும், சரும நோய்கள் நீங்கி உடல் நலமும் உண்டாகும்.

கீரையின் பூக்களை மட்டும் கிள்ளி நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்டி காலையும், மாலையும் ஒரு டம்ளர் சாப்பிட்டு வர உதிரப் போக்கினை நிறுத்தி மூன்று நாட்களில் உதிரம் நின்று நலம் உண்டாகும்.

குடல் வலிமை இல்லாதவர்களுக்குக் குடல் இரணம் இருப்பவர்களும் இந்த கீரையை சாப்பிட்டு வருவதால் விரைவில் நல்ல குணம் தெரியும்.

மேலும் எந்தெந்த கீரைகளை எந்தெந்த காலத்தில் உண்ணலாம் என்றும், அதன் பயன்களையும் தெரிந்துக்கொள்ள இணையலாம்.

(4 votes)

1 thought on “பண்ணைக் கீரை – நம் மூலிகை அறிவோம்

Comments are closed.