குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான தானிய உணவு.
தேவையான பொருட்கள்
- ½ கப் பனிவரகு மாவு
- 6 சின்ன வெங்காயம்
- 3 தக்காளி
- ½ தேக்கரண்டி கடலைப்பருப்பு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
- ½ தேக்கரண்டி கடுகு
- 1 மேசைக்கரண்டி மசாலா பொடி (மிளகாய், தானிய, பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம் பொடித்தது)
- சிறிது கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி செக்கு கடலை எண்ணெய்
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- பனிவரகு மாவில் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மசாலா பொடி சேர்த்து வேக வைத்த பனிவரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
- கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். பனிவரகு மசாலா உருண்டை தயார்.
பனிவரகு மசாலா உருண்டை
குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான சிறுதானிய உணவு.
⏲️ ஆயத்த நேரம்
15 mins
⏲️ சமைக்கும் நேரம்
30 mins
🍴 பரிமாறும் அளவு
2
🍲 உணவு
சிற்றுண்டி
தேவையான பொருட்கள்
- ½ கப் பனிவரகு மாவு
- 6 சின்ன வெங்காயம்
- 3 தக்காளி
- ½ தேக்கரண்டி கடலைப்பருப்பு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
- ½ தேக்கரண்டி கடுகு
- 1 மேசைக்கரண்டி மசாலா பொடி (மிளகாய், தானிய, பட்டை, லவங்கம், சோம்பு, சீரகம் பொடித்தது)
- சிறிது கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- 2 தேக்கரண்டி செக்கு கடலை எண்ணெய்
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
- பனிவரகு மாவில் உப்பு சேர்த்து கலந்து, சூடான தண்ணீர் விட்டு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவை கைகளில் எண்ணெய் தொட்டுக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- உருட்டிய உருண்டைகளை இட்லி பானையில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு தாளித்து, சிவந்ததும் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மசாலா பொடி சேர்த்து வேக வைத்த பனிவரகு உருண்டைகளைச் சேர்த்துக் கிளறவும்.
- கொத்தமல்லி, தேங்காய் துருவல் தூவி நன்கு கிளறிவிட்டு இறக்கவும். பனிவரகு மசாலா உருண்டை தயார்.
- குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம். விரைவில் செய்யக்கூடிய சுவையான தானிய உணவு.