பனிவரகு கஞ்சி

அன்றாடம் காலை உணவாக எளிதில் தயாரிக்கும் இந்த பனிவரகு அரிசியில் கஞ்சி மிகப் பிரமாதமாக இருக்கும். எந்த பிரத்யேக மசாலாவும் இல்லாமல் எளிதாக காலை கஞ்சி செய்து குடிப்பது முடி உதிர்வை தடுக்கும், முகப்போலிவை அதிகரிக்கும், உடலை இளைக்கவும் உதவும்.

Panivaragu-Millet-Proso-Millet in Tamil, Millet

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உண்டு வர இந்த தொந்தரவு மறையும். அஜீரணம் உள்ளவர்கள் தொடர்ந்து பருக சீரான ஜீரணம் நடைப்பெறும். அடிக்கடி தோன்றும் வயிறு உப்புசம், தொப்பை காணாமல் போகும். பனிவரகு பயன்கள் நன்மைகள், மருத்துவகுணங்கள் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும். 

தேவையான பொருட்கள்

  • 1 கப் பனிவரகு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு மிளகு தூள்
  • தேவையான அளவு சீரக தூள்

செய்முறை

  • ஒரு கப் பனிவரகை முதலில் 20 நிமிடம் ஊறவைக்கவும். 
  • பின் நான்கு அல்லது ஐந்து கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஊறிய பனிவரகை சேர்த்து கொதிக்கவிடவும். 
  • 5 – 7 நிமிடத்தில் நன்றாக மலர்ந்து வெந்த நிலையில் இருக்கும் பனிவரகில் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும். 
  • சிறிது மிளகு சீரகத்  தூள் சேர்க்கவும்.
  • கொத்தவரை வத்தல், கத்திரிக்காய்  மசாலாவுடன் சூடாக காலையில் பருக மிகவும் சுவையாக இருக்கும்.  

பனிவரகு கஞ்சி

(2 votes)



அன்றாடம் காலை உணவாக எளிதில் தயாரிக்கும் இந்த பனிவரகு அரிசியில் கஞ்சி மிகப் பிரமாதமாக இருக்கும்.


⏲️ ஆயத்த நேரம்
20 mins

⏲️ சமைக்கும் நேரம்
10 mins

🍴 பரிமாறும் அளவு
4

🍲 உணவு
காலை


தேவையான பொருட்கள்
  • 1 கப் பனிவரகு
  • தேவையான அளவு உப்பு
  • தேவையான அளவு மிளகு தூள்
  • தேவையான அளவு சீரக தூள்
செய்முறை
  1. ஒரு கப் பனிவரகை முதலில் 20 நிமிடம் ஊறவைக்கவும். 
  2. பின் நான்கு அல்லது ஐந்து கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஊறிய பனிவரகை சேர்த்து கொதிக்கவிடவும். 
  3. 5 – 7 நிமிடத்தில் நன்றாக மலர்ந்து வெந்த நிலையில் இருக்கும் பனிவரகில் சிறிது உப்பு சேர்த்து இறக்கவும். 
  4. சிறிது மிளகு சீரகத்  தூள் சேர்க்கவும்.
  5. கொத்தவரை வத்தல், கத்திரிக்காய்  மசாலாவுடன் சூடாக காலையில் பருக மிகவும் சுவையாக இருக்கும்.  

(2 votes)